ஆஸ்திரேலியாவுக்கு விமானம் மூலம் வருகின்றவர்களை பரிசோதனை செய்து, இவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்லது சமூகத்திற்கு கேடு என்று கருதினால், அவர்களை குடிவரவு அதிகாரிகள் திருப்பி அனுப்புவது நாமறிந்த ஒன்று.
ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு வருகைதர முன்னரே, வெளிநாட்டு விமானநிலையங்களில் வைத்து, சந்தேகத்திற்கிடமானவர்களைத் தடுத்து நிறுத்தும் பணியில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையின் Border Force ஈடுபடுகின்றது.
குறிப்பாக ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள, சில சர்வதேச விமான நிலையங்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும்நோக்கில், விமானம் ஏற வருகின்ற சந்தேகத்திற்கு இடமானவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தும் பணியில் ஆஸ்திரேலிய Border Force-இன் Airline Liaison Officers - சிறப்புப் பிரிவு இயங்கிவருதாக குடிவரவுத்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்தார்.
இதன்மூலம் தீவிரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கானவர்கள், ஆஸ்திரேலியாவுக்குள் வர முன்னரே தடுத்துநிறுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
