SKIP TO MAIN CONTENT

கான்பரா விமானநிலையத்தில் துப்பாக்கிச்சூடு! சந்தேக நபர் கைது!!

கான்பரா விமானநிலையத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

Three bullet holes seen on the glass window of Canberra airport after reports of gunfire on Sunday
Credit: Twitter / Fran Kelly

1 min read

Published

Updated

By Renuka

Source: SBS


Skip to article content

ACT-ஆஸ்திரேலிய தலைநகர் பிராந்தியத்திலுள்ள கான்பரா விமானநிலையத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த விமானநிலையத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் கான்பரா விமானநிலையத்தில் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்ற அதேநேரம் துப்பாக்கிதாரி ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இன்று மதியம் 1.30 மணியளவில் விமான நிலைய கட்டிடத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து கான்பரா விமான நிலையத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டதாகவும், சிறிது நேரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் துப்பாக்கியும் மீட்கப்பட்டதாகவும் ACT பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் மட்டுமே இந்த சம்பவத்திற்கு காரணமானவர் என நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் இச்சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

——————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில்

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now