மெல்பேர்னின் பிரபல பீட்ஸா உணவகமான "400 Gradi" தயாரித்த பீட்ஸா, உலகளாவிய ரீதியில் நடைபெற்ற பீட்ஸா போட்டியில் முதலிடம் பெற்றுள்ளது.
இத்தாலியில் நடைபெற்ற இந்த போட்டியில் உலகெங்கிலுமுள்ள ஆயிரம் உணவகங்கள் தயாரித்த பீட்ஸாக்களின் மத்தியில் 400 Gradi மெல்பேர்ன் பீட்ஸா முதலிடத்தை தட்டிச்சென்றுள்ளது.
400 Gradi உணவகம் மெல்பேர்னை தளமாகக்கொண்டு 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும்.
இத்தாலிய தர பீட்ஸாக்களை சுவையுடன் பரிமாறும் பிரத்தியேக தரமுடைய 400 Gradi, மெல்பேர்ன் உணவுப்பிரியர்கள் மத்தியில் மாத்திமல்லாமல் உலகளாவிய ரீதியிலும் பிரபலமானதாகும்.
கடந்த பத்துவருடங்களாக மெல்பேர்னில் மாத்திரம் தனது கிளை உணவகங்களின் மூலம் பீட்ஸாக்களை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் 400 Gradi, வெகுவிரைவில் அடிலைட், அமெரிக்கா, நியூஸிலாந்து நகரங்களிலும் தனது கிளைகளை திறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் புகழ்பதிக்கும் வகையில் இத்தாலியில் பெற்றுள்ள வெற்றியினால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக அதன் உரிமையாளர் Johnny Di Francesco தெரிவித்துள்ளார்.
