SKIP TO MAIN CONTENT

சர்வதேச போட்டியில் 1 மில்லியன் டொலர் வென்று தமிழ்ச்சிறுவன் சாதனை!

Youtube
Source: YouTube

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

பியானோ இசைக்கருவியை வேகமாக வாசித்து உலக அரங்கையே அதிர வைத்த தமிழ்ச்சிறுவன் லிடியன் நாதஸ்வரம் அமெரிக்காவில் நடைபெற்ற The World’s Best போட்டியில் வென்றுள்ளதுடன் 1 மில்லியன் டொலர் பரிசினையும் தட்டிச்சென்றுள்ளார்.

அமெரிக்காவின் CBS தொலைக்காட்சி நடத்திய ‘The World’s Best’ என்ற ரியாலிட்டி போட்டியில் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரமும் கலந்து கொண்டார்.

பியானோ வாசிப்பதில் சிறந்து விளங்கும் இவர் அதனை பலமடங்கு வேகத்தில் வாசித்து ஒட்டுமொத்த உலகின் பாராட்டைப்பெற்று வந்தநிலையில் நேற்றிரவு The World’s Best-இன் இறுதிப்போட்டி நடைபெற்றது.

இதில் Kukkiwon அணிக்கும் லிடியனுக்கும் இடையில் கடும்போட்டி நிலவியபோதும் அனைவரினதும் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிவாகை சூடிய லிடியன் 1மில்லியன் டொலர் பரிசினைப் பெற்றுக்கொண்டார்.

லிடியனுடன் நாம் நடத்திய நேர்காணலை கீழ்க்காணும் இணைப்பில் செவிமடுக்கலாம்.

https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/ulkai-viykk-vaitt-tmilll-cirruvnnn?language=ta

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now