NSW, குயின்ஸ்லாந்து, டாஸ்மேனியா வாசிகள் செலவழிக்க அரசு $300 தருகிறது

கோவிட் கட்டுப்பாடுகளினால் பாதிப்புக்குள்ளான சுற்றுலாத் துறை மற்றும் உணவகங்கள், மீண்டும் தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றமடைய ஊக்குவிக்கும் வகையில், நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் டாஸ்மேனியா மாநில அரசுகள் மக்களுக்கு இலவச கூப்பன் வழங்கும் திட்டங்களை அறிவித்துள்ளன.

People are seen in Byron Bay, New South Wales, Saturday, September 11, 2021. Restrictions in a handful of regions in NSW have been lifted, allowing people to see family and friends, dine out and visit the gym. (AAP Image/Jason O'Brien) NO ARCHIVING

People are seen in Byron Bay, New South Wales, Saturday, September 11, 2021. Restrictions in NSW have now been lifted, (AAP Image/Jason O'Brien) Source: AAP

நாட்டு மக்கள் $300 வரை மதிப்புள்ள பயண voucherகள் பெற முடியும், அத்துடன், கட்டுப்பாடுகள் விலக்கப்படும் சூழலில் மக்கள் அனுபவிக்கவென ஊக்கத் தொகை கிடைக்கிறது.

NSW அரசாங்கம் அதன் பிரபலமான Dine and Discover voucher திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.  முன்னர் கிடைத்த நான்கு voucherகளுக்கும் மேலதிகமாக இரண்டு $25 voucherகள் NSW மாநிலத்தில் வசிப்பவர்களுக்குக் கிடைக்கிறது.
Customers dining in at the Rio, Summer Hill, Sydney, as NSW's COVID-19 restrictions ease. (AAP Image/James Gourley)
Customers dining in at the Rio, Summer Hill, Sydney, as NSW's COVID-19 restrictions ease. (AAP Image/James Gourley) Source: AAP
குயின்ஸ்லாந்து மாநில அரசும் தனது சொந்த voucher திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  மாநிலத்தில் வாழ்பவர்கள் மாநிலம் முழுவதுமுள்ள சுற்றுலா இடங்களுக்கான கட்டணத்தில் 50 சதவீத கழிவு பெற விண்ணப்பிக்க முடியும்.
An undated supplied photo of a couple bicycling near the beach at Palm Cove in far north Queensland. Palm Cove is being marketed as a romantic retreat. (AAP Image/Tourism Queensland) NO ARCHIVING EDITORIAL USE ONLY
An undated supplied photo of a couple bicycling near the beach at Palm Cove in far north Queensland. Palm Cove is being marketed as a romantic retreat. Source: TOURISM QLD
இந்த வகையான அறிவிப்புகளை டாஸ்மேனியா மாநில அரசும் தற்போது வெளியிட்டுள்ளது.  தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் வசிப்பவர்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டாஸ்மேனியா மாநிலத்திற்குப் பயணத்தை மேற் கொண்டால் $300 voucherகளைப் பெற முடியும்.
After suffering years of years abuse by nearby mining operations, Tasmania's King River is now home to a new tourism rafting venture.
After suffering years of years abuse by nearby mining operations, Tasmania's King River is now home to a new tourism rafting venture. Source: AAP

NSW Dine and Discover voucherகளை உணவு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக செலவிடலாம்.
அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை அவை செல்லுபடியாகும்
இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகமான சில மாதங்களில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டதால், பல voucherகள் பயன்படுத்தப்படாமல் இருந்தன.  அவற்றின் பாவனைக் காலம் இரண்டு முறை நீட்டிக்கப் பட்டன.  இப்பொழுது அறிவிக்கப் பட்டதையும் சேர்த்தால் NSW மாநிலத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் $150 வழங்கப்பட்டுள்ளது.
NSW Premier Dominic Perrottet taps a beer keg during a tour of the Marsden Brewhouse in Marsden Park, Sydney.
NSW Premier Dominic Perrottet taps a beer keg during a tour of the Marsden Brewhouse in Marsden Park, Sydney. Source: AAP
புதிய voucherகள் கோடை காலத்தில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்றும், Service NSW செயலி வழியாக அவற்றை மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும், அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை அவை செல்லுபடியாகும் என்றும் NSW மாநில Premier Dominic Perrottet கூறினார்.

கூடுதல் voucherகள் வழங்குவதால் மாநில அரசுக்கு மேலதிகமாக $ 250 மில்லியன் செலவாகிறது.
Nidey Beach on Fitzroy Island in Queensland. A former nudist haven on a tropical Queensland island has topped the list of Australia's best beaches.
Nidey Beach on Fitzroy Island in Queensland. A former nudist haven on a tropical Queensland island has topped the list of Australia's best beaches. Source: FITZROY ISLAND RESORT
Great Queensland Getaway என்ற பிரச்சாரத்தை குயின்ஸ்லாந்து  மாநில Premier Annastacia Palaszczuk வியாழக்கிழமை காலை அறிவித்தார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தென்கிழக்கு, மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு அதிகபட்சமாக $100 மற்றும் வடக்கு பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு அதிகபட்சமாக $200 வரை என்று மக்கள் சுற்றுலாவிற்குச் செலவழிக்கும் பணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடிகளை அவர் அறிவித்தார்.

இந்த திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை, அக்டோபர் 18ஆம் தேதி காலை 9 மணிக்கு queensland.com இணையத்தளத்தில் தொடங்குகிறது.
Tasmanias King Island is positioning itself as a world-class golfing destination with the Cape Wickham Golf Course (AAP Image/Tourism Tasmania)
Tasmanias King Island is positioning itself as a world-class golfing destination with the Cape Wickham Golf Course (AAP Image/Tourism Tasmania) Source: TOURISM TASMANIA
தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் வசிப்பவர்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டாஸ்மேனியா மாநிலத்திற்குப் பயணத்தை மேற் கொண்டால் $300 voucherகளைப் பெற முடியும்.  

இந்த திட்டத்தில், மொத்தமாக 10,000 voucherகள் வரை வழங்கப்படும். மேலும் பெறுநர்கள் தங்கள் பயணத்தின் போது $200 வரை தங்குமிடங்களிலும், $100 வரை சுற்றுலா மற்றும் பொழுது போக்கு நடவடிக்கைகளில் செலவிடலாம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

Updated

By Kulasegaram Sanchayan

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand