SKIP TO MAIN CONTENT

சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டு ஒருவருடத்தில் 5420 ஒரேபாலின திருமணங்கள்!

Same-sex marriage
Source: Getty Images

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவில்  ஓரினச்சேர்க்கையாளர்கள் சட்டரீதியாக திருமணம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த வருடம் மாத்திரம் சுமார் 5420 ஒரேபாலின திருமணங்கள் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப்பதிவுகளை மேற்கொள்ளும் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவில் மேற்கண்ட தகவல் பெறப்பட்டுள்ளது.

சிட்னியில் மாத்திரம் சுமார் 1988 ஒரேபாலின திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் குயின்ஸ்லாந்தில் 1094 திருமணங்களும் விக்டோரியாவில் 1331 திருமணங்களும் அதிக எண்ணிக்கைகளாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒரேபாலின திருமணம் சட்டபூர்வமானது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு முன்னர் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டுமா என்பது தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் சுமார் 61.6 வீதமானவர்கள் ஆதரவாகவும்ம் 38.4 வீதமானவர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now