ஆஸ்திரேலியாவின் Northern Territory-இலுள்ள Murranji மாட்டுக்கிடையிலிருந்து சுமார் 2 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 1400 மாடுகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The Pickersgill குடும்பத்திற்குச் சொந்தமான பண்ணை நிலத்திலிருந்தே இந்த மாடுகள் களவாடப்பட்டுள்ளன.
இத்திருட்டு கடந்த பல மாதங்களாக நடைபெற்றுவந்திருப்பதாகவும் கால்நடைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டபோதே இவை காணாமல் போயிருப்பது கண்டறியப்பட்டதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
Pickersgill குடும்பம் சுமார் 447,500-hectare அளவிலான பண்ணை நிலத்தை அதிலுள்ள 12,500 Brahman-cross கால்நடைகளோடு சேர்த்து கடந்த மார்ச் மாதம் கொள்வனவு செய்திருந்தனர்.
இந்நிலையில் நீண்டநாட்களாக இடம்பெற்றுவரும் இத்திருட்டு பற்றிய தகவல்களை அறியத்தருபவர்களுக்கு இரண்டரை லட்சம் டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என Pickersgill குடும்பம் அறிவித்துள்ளது.
அதேநேரம் Northern Territory-இல் இவ்வாறாக கால்நடைகள் திருடுபோகும் சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்துவரும் பின்னணியில், இதுதொடர்பில் ஆராய்வதற்கு stock squad ஒன்றை மீள அமைக்க வேண்டுமென்ற தமது நீண்டநாள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டுமென அங்குள்ள பண்ணையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
