SKIP TO MAIN CONTENT

700 மில்லியன் டொலர்கள் அபராதம் செலுத்துகிறது Commonwealth வங்கி!

Commonwealth Bank of Australia (CBA) signage in Sydney, Saturday, May 5, 2018.
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

Anti-money laundering and counter-terrorism-பண மோசடி மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான  விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிற்கு உள்ளான Commonwealth வங்கி, இதற்கான அபராதமாக சுமார் 700 மில்லியன் டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

Commonwealth வங்கி பயன்படுத்தும் பணவைப்புக் கருவிகளூடாக, பணமோசடி செய்யும் குழுக்கள், சந்தேகத்துக்குரிய வகையில் பல மில்லியன் டொலர்கள் பண பரிமாற்றம் செய்துள்ளதாகவும், ஆனால் இந்தப் பணபரிமாற்றங்களை Commonwealth வங்கி உரிய முறையில் கண்டுபிடிக்கவோ, அவை குறித்து முறையிடவோ இல்லை என்ற குற்றச்சாட்டை பண மோசடி மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதிவழங்கலைக் கட்டுப்படுத்துவதற்கென செயற்படும் AUSTRAC அமைப்பு முன்வைத்திருந்தது.

இவ்விடயத்தில் சுமார் 53,506 விதிமீறல்களை ஏற்றுக்கொண்ட ஏற்றுக்கொண்ட Commonwealth வங்கி, இதற்கான அபராதமாக 2.5 மில்லியன் சட்ட செலவு உட்பட 700 மில்லியன் டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now