‘சராசரி ஆஸ்திரேலியன்’ யார் தெரியுமா?

2016ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. சராசரி ஆஸ்திரேலியன் யார் என்பது இப்போது தெரியவந்ததுள்ளது.

Julie Brett

Julie Brett, a follower of the Druid faith from Katoomba, believes it's hard to explain the 'typical Australian' in one answer. Source: SBS News

சராசரி ஆஸ்திரேலியன்:

    • 38 வயதுடைய
    • ஆங்கிலேய பூர்வீகம் கொண்ட,
    • ஆஸ்திரேலியாவில் பிறந்த,
    • திருமணமான,
    • பெண்.
    • இவள், மூன்று படுக்கையறைகள் கொண்ட ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் கணவனுடன் வாழ்கிறாள்,
    • அவள் வீட்டில் இரண்டு மோட்டார் வாகனங்கள் உள்ளன.

'சராசரி ஆஸ்திரேலியன்' என்பவர், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட, மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது மிகவும் பொதுவாக அளிக்கப்பட்ட பதில்களை அடிப்படையாக கொண்டது.  2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சராசரி ஆஸ்திரேலியனாகக் கணிக்கப்பட்டவருக்கும் தற்போது கணிக்கப்படுவருக்கும் ஒரு வயது தான் வித்தியாசம்.  2011ம் ஆண்டு கணிக்கப்பட்ட சராசரி ஆஸ்திரேலியன் 37 வயதான பெண்.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நீங்கள் வாழும் இடத்தில் வாழ்பவர்களை, வம்சாவளி, வயது, உணவுப் பழக்கம், மதம் மற்றும் பிறந்த இடம் என்பவற்றின் அடிப்படையில் மேலும் அறிந்து கொள்ள:

 

 

 

நான் வாழும் இடம் எப்படியானது? மேலும் அறிந்து கொள்ள:

இந்த இணைப்பில், பூர்வீகம், வயது, உணவுப் பழக்கம், மத நம்பிக்கை, மற்றும் பிறந்த இடம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வதிவிடத்திலுள்ளவர்களை நீங்களே ஆராயலாம்.

 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 'சராசரி நபர்' மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறார்.  வயதில் முதிர்ந்தவராக, 42 வயதுடைய டாஸ்மேனியா மாநிலத்தவரும் Northern Territoryயின் சராசரி நபர் 34 வயதுடையவராக, ஆஸ்திரேலியாவில் மிக இளமையான சராசரி நபராகிறார்.

டாஸ்மேனியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநில சராசரி நபர் தனது சொந்த வீட்டில் வாழ்கிறார், ஆனால், Northern Territoryயின் சராசரி நபர் வாடகை கொடுத்து வாழ்கிறார்.

ஆஸ்திரேலியாவின் சராசரி நபர் ஆங்கிலப் பூர்வீகம் கொண்டிருக்கிறார் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.  ஆனால், குயின்ஸ்லாந்து மாநில சராசரி நபர், நியூசிலாந்ததில் பிறந்தவர்.  நியூ சவுத் வேல்ஸ் மாநில சராசரி நபர், சீனாவில் பிறந்தவர்.  விக்டோரியா மா நிலத்தவர் இந்தியாவில் பிறந்தவர்.

தரவுகளின் அடிப்படையில், புள்ளிவிபரத்துறை ‘சராசரி ஆஸ்திரேலியன்' யார் என்று வெளிப்படுத்தியிருந்தாலும், அன்றாட வாழ்க்கையில் ஒரு சாதாரண ஆஸ்திரேலியருக்கு இந்த சராசரி ஆஸ்திரேலியன் யார் என்று அறிவதால் எந்தப் பயனுமில்லை என்று, சிட்னி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் சமூகக் கொள்கை துறையில் பேராசிரியராகக் கடமையாற்றும் Dr Amanda Elliot வாதிட்டார்.  "இது சாதாரண மக்களுக்கும் அர்த்தமற்றது, புள்ளிவிவர அடிப்படையிலும் அர்த்தமற்றது - எமது பல்கலாச்சாரத் தன்மையை இது மூடி மறைக்கிறது" என்று அவர் கூறினார்.

கடந்த வருடம் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது கணினிகள் செயலிழந்து போனதற்கு IBM பொறுப்பேற்றிருக்கிறது.  அதற்கான செலவுகளை IBM நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது என்று பிரதமர் Malcolm Turnbull கூறினார்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த அடுத்த வெளியீடு, ஜூன் 27ம் நாள் வெளியிடப்படும் என்றும் அதில் எந்தெந்தப் புறநகரில் எப்படியான சமூகம் வாழ்கிறது என்ற தரவுகள் வெளியாகும் என புள்ளிவிபரத்துறை அறிவித்துள்ளது.

 

 

 

 

 

 


2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now