SKIP TO MAIN CONTENT

Census-வேதனையிலும் ஒரு சாதனை!

Census
Census Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

நாட்டிலுள்ள ஏறக்குறைய 95 சதவீதமான வீடுகள் சென்சஸ்/மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தைப் பூர்த்தி செய்துள்ளதாக இவ்வருட சென்சஸ் திட்ட இயக்குனர் Duncan Young தெரிவித்துள்ளார்.

சென்சஸ் இரவு ஆஸ்திரேலிய புள்ளி விபரவியல்-ABS திணைக்களத்திற்கு ஒரு சோதனையான இரவாக அமைந்திருந்தமை நாமறிந்த ஒன்று. இணையத்திருடர்களின் ஊடுருவல் முயற்சியால் சென்சஸ் இணையத்தளத்தையே முடக்கவேண்டிய நிலை ABSக்கு ஏற்பட்டிருந்தது.

ஆனால் குழறுபடிகளுக்கு மத்தியிலும் இத்தனை பேர் சென்சஸில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக Duncan Young கூறினார்.

இதேவேளை சென்சஸில் பங்கெடுப்பதற்கான கடைசிநாள் நாளை 23ம் திகதி ஆகும். எனவே இதுவரை தமது படிவங்களைப் பூர்த்தி செய்யாதவர்கள் அதனை இப்பொழுதே செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதில் பங்கெடுக்கத்தவறினால் நாளொன்றுக்கு 180 டொலர்கள் வீதம் தண்டப்பணம் செலுத்த நேரிடும்.

இந்த சென்சஸின் இறுதி முடிவு அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தின் பின் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now