SKIP TO MAIN CONTENT

புதுப்பொலிவு பெறும் மெல்பன் தமிழர்களின் 'தலைநகரம்', கோடிகளில் தயாராகும் அடுக்குமாடிகள்!

மெல்பன் தமிழர்களின் 'தலைநகராகவும்' பல்லின மக்கள் செறிவாக வாழும் பிரதேசமாகவும் பன்னெடுங்காலமாகத் திகழும் Dandenong மாநகர் அடுத்த வருடம் முதல் பல லட்சக்கணக்கான டொலர்கள் செலவில் புதுப்பொலிவு பெறவுள்ளது.

Dandenong
Dandenong Source: SBS Tamil

2 min read

Published

Updated


Skip to article content

அடுக்கு மாடி வீடுகள், வானுயர்ந்த கோபுரங்கள், புதிய வீதிகள் என்று முற்றிலுமாக உருமாறப்போகும் Dandenong பிரதேசத்தின் ஊடாக, நாட்டின் பொருளாதாரத்திற்கு வருடமொன்றுக்கு 150 கோடி டொலர் வருமானம் கிடைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஆரம்பமாகவுள்ள அபிவிருத்திப் பணிகளில் Foster Street, Cheltenham Road, Thomas Street, Halpin Way மற்றும் Mason Street ஆகியவற்றில் அமைந்துள்ள கடைகள் மற்றும் கட்டடங்கள் இடிக்கப்பட்டு, சுமார் 450 வீடுகளுடன்கூடிய அடுக்குமாடிகளும் 29 மாடிகள் கொண்ட இரண்டு குடிமனைக்கோபுரங்களும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

Dandenong ரயில் நிலையத்துடன் அண்டிய பிரதேசம் முற்றிலுமாக புதிய பிரதேசமாக உருமாறப்போகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு பெரிய அங்காடிகளும் இங்கு புதிதாக அமையவுள்ளன.

Dandenong
Source: SBS Tamil

2023 ஆம் ஆண்டு முதல் சுமார் 18 வருடங்களுக்கு இந்த அபிவிருத்திப் பணிகள் இடம்பெறும் என்றும், முதல் கட்டப் பணிகளின்போது சுமார் 3890 பேருக்கு வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்றும், மேற்கொண்டு நடைபெறப்போகும் பணிகளில் மேலதிகமாக 12 ஆயிரத்து 490 பேருக்கு வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம், Dandenong பிரதேசத்தில் வசிப்பவர்களில் 26 வீதமானவர்கள் மாத்திரமே ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள். மிகுதி மக்கள் அனைவரும் பல நாடுகளிலிருந்தும் புலம்பெயர்ந்தவர்கள்.

முக்கியமாக, அல்பேனியா, ஆப்கான் மற்றும் தெற்காசிய நாட்டவர்கள் இங்கு செறிவாக வாழ்கிறார்கள். தமிழ் மக்களில் பெருந்தொகையானவர்கள் இப்பகுதியில் வசிப்பதும், பல தமிழ் வர்த்தகர்களுக்கு Dandenong இன்றைக்கும் பிரதான வருமான வளம் மிக்க மையமாகத் திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.

அறிவிக்கப்பட்டுள்ள, Dandenong அபிவிருத்தி தொடர்பில் ரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள 'லிட்டில் இந்தியா' வர்த்தகர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளினால் தொடர்ச்சியாக இடம் மாறுவதற்குத் தள்ளப்பட்டுள்ள தங்களது கடைகள் வருமான ரீதியாகப் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும், அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த பிறகு, தங்களுக்கு ஏற்ற கடைகள் உரிய வாடகையோடு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் மிக மிக அரிது என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now