நாட்டில் 50 லட்சம் பேருக்கு Centrelink கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படுவதாக சமூக சேவைகள் அமைச்சர் Christian Porter தெரிவித்துள்ளார்.
Age Pension பெறும் 25 லட்சம் பேர் உட்பட ஏனைய நிதிச்சலுகைகளைப் பெறும் 50 லட்சம் பேரே இவ்வாறு நன்மையடையவுள்ளனர்.
இதன்படி
Single Age Pension இருவார கொடுப்பனவு 877.10 டொலராக அதிகரிக்கப்படும் அதேநேரம் Couple combined இருவார கொடுப்பனவு 1,322.40 டொலராக அதிகரிக்கப்படுகிறது.
Single people without children on Newstart Allowance – including Energy Supplement இருவார கொடுப்பனவு 537.50 டொலராக அதிகரிக்கப்படுகிறது.
Parenting Payment single இருவார கொடுப்பனவு 750.50 டொலராக அதிகரிக்கப்படுகிறது.
Centrelink கொடுப்பனவுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மீளாய்வு செய்யப்படும் நிலையில் லிபரல்- நஷனல் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கொண்டுவரப்படவுள்ள 7வது கொடுப்பனவு அதிகரிப்பு இதுவென அமைச்சர் Christian Porter தெரிவித்தார்.
Share