Department of Human Services/Centrelink அதிகாரிகள் என்ற போர்வையில் மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு The Australian Competition and Consumer Commission(ACCC) அறிவுறுத்தியுள்ளது
Centrelink அலுவலகத்திலிருந்து அழைப்பதாகக் கூறி, உங்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அதற்கு முன்னதாக நீங்கள் ஒரு தொகையைச் செலுத்த வேண்டுமெனவும் யாராவது சொன்னால் அதை நம்பி ஏமாற வேண்டமென ACCC எச்சரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் 2,200 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும், இவ்வாறான மோசடி மூலம் 27,000 டொலர் பணம் இழக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே திடீரென யாராவது ஒருவர் Centrelink அலுவலகத்திலிருந்து அழைப்பதாகக் கூறி, நீங்கள் அதிக கொடுப்பனவு அல்லது ஓய்வூதியத்திற்குத் தகுதிபெற்றுள்ளீர்கள் எனச் சொன்னால், உடனடியாக தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிடுமாறு ACCC அறிவுறுத்தியுள்ளது.
Share