SKIP TO MAIN CONTENT

அதிகரிக்கப்படும் Centrelink கொடுப்பனவுத் தொகையை யாரெல்லாம் பெறமுடியும்?

Centrelink கொடுப்பனவுத்தொகை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதளவிற்கு அதிகரிக்கப்படுகிறது.

 Cash
Source: AAP

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துவரும் பின்னணியில், இதனைச் சமாளிப்பதற்கு உதவும்வகையில் இக்கொடுப்பனவுகள் உயர்த்தப்படுவதாக லேபர் அரசு தெரிவித்துள்ளது.

இக்கொடுப்பனவு அதிகரிப்பு செப்டம்பர் 20ம்திகதி முதல் நடைமுறைக்குவரும் என குறிப்பிடப்படுகிறது.

இதன்படி எந்தெந்தப் பிரிவுகளில் உள்ளோர் எத்தனை டொலர்களை அதிகமாகப் பெறவுள்ளனர் என்ற விவரம் கீழே தரப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்படுவது இருவாரங்களுக்கான கொடுப்பனவுத்தொகையாகும்.

Age and Disability Support Pension and Carer Payment

தனிநபர் $38.90 ( இருவாரங்களுக்கான மொத்த தொகை

$1,026.50)

தம்பதி $58.80 (இருவாரங்களுக்கான மொத்த தொகை

$1547.60)

Jobseeker

தனிநபர் $25.70 (இருவாரங்களுக்கான மொத்த தொகை

$677)

தம்பதி $23.40 (இருவாரங்களுக்கான மொத்த தொகை

$616.60)

Parenting Payment

தனிநபர் $35.20 (இருவாரங்களுக்கான மொத்த தொகை

$927.40)

தம்பதி $23.40 (இருவாரங்களுக்கான மொத்த தொகை

$616.60)

அரசின் இக்கொடுப்பனவு அதிகரிப்புமூலம் சுமார் 4.7 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

30 ஆண்டுகளுக்குப்பின்னர் Centrelink கொடுப்பனவுகளில் மிகப்பெரிய அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஓய்வூதியத்தைப் பொறுத்தவரையில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சமூக சேவைகளுக்கான அமைச்சர் Amanda Rishworth தெரிவித்தார்.

——————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now