SKIP TO MAIN CONTENT

சென்டர்லிங்கிடம் பொய் சொன்னீர்களா?

Centrelink
Centrelink signage at the Yarra branch in Melbourne. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

சென்டர்லிங்கிடம் பொய்சொல்லி பணம் பெற்ற ஒரு லட்சத்தி 70 ஆயிரம் பேர், அப்பணத்தை திரும்பச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால், அவர்களிடமிருந்து வட்டி அறவிடப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொய்யான காரணங்களைக் கூறி, சென்டலிங்கிடமிருந்து சுமார் 900 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொண்டவர்களிடமிருந்து அப்பணத்தை மீள அறவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி பொய்சொல்லி பணம் பெற்றவர்கள், கொடுக்கப்பட்ட காலஅவகாசத்திற்குள் அவற்றை மீளச் செலுத்துவதற்கான ஒன்றைச் செய்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யத்தவறுபவர்களிடமிருந்து வட்டி அறிவிடப்படும் அதேநேரம் பணத்தை மீளப்பெறுவதற்கான வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென Human Services அமைச்சர் Michael Keenan தெரிவித்தார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now