SKIP TO MAIN CONTENT

Centrelink உடன் பேச இயலவில்லையா? காரணம் என்ன?

A Centrelink sign
File image. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

நீங்கள் Centrelink-க்கு அழைப்பெடுத்து மறுபக்கத்திலிருந்து யாரும் பதிலளிக்காததால் சலித்துப்போய் இருக்கிறீர்களா? அல்லது தொலைபேசி இணைப்பு தொடர்ந்தும் பாவனையில் இருப்பதைக் காட்டும் engaged சத்தம் கேட்கிறதா?

இந்த நிலை உங்களுக்கு மட்டுமல்ல. நாட்டில் பல பேர் இதை தினமும் அனுபவிக்கிறார்கள்.

கடந்த வருடம் ஜுன் மாதம் முதல் இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரை Centrelink-க்கு மேற்கொள்ளப்பட்ட சுமார் 42 மில்லியன் அழைப்புக்களுக்கு engaged சத்தமே பதிலாகக் கிடைத்ததாக செனற் விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள Department of Human Services,  பலர் Smartphone-களிலுள்ள Appஐப் பயன்படுத்தி அழைப்பினை மேற்கொள்ளும்போது அந்த App தானியங்கியாக திரும்பத் திரும்பத் Centrelink இலக்கத்தை அழைத்திருக்கக்கூடிய வாய்ப்பு இருந்திருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும் இணையத்தாக்குதல் சம்பவங்களும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ள Department of Human Services இதைப்பற்றிய மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

எனினும் Centrelink-இன் சீரற்ற தொலைபேசிச் சேவையே இந்நிலைக்கு மிக முக்கிய காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2015-16 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 29 மில்லியனாக இருந்ததாகவும், அதற்கு முந்தைய ஆண்டில் இது 22 மில்லியனாகவும் காணப்பட்ட நிலையில் கடந்த 10 மாதங்களில் இந்த எண்ணிக்கை 42 மில்லியன் ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now