ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விற்பனை அங்காடியான Chadstone shopping centre மேலும் பெரிதாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 685 மில்லியன் டொலர் செலவில் மேம்படுத்தப்படவுள்ள Chadstone விற்பனை அங்காடியில் புதிதாக பல அம்சங்கள் இணைக்கப்படவுள்ளன.
குறிப்பாக மேலதிகமாக 1400 கார்களுக்கான தரிப்பிடம், 9 மாடிகளைக் கொண்ட அலுவலக கட்டடம், உணவு விற்பனைச் சந்தை மற்றும் உணவு உட்கொள்வதற்கான இடம் என பல புதிய அம்சங்கள் இதற்குள் உள்ளடக்கப்படவுள்ளன.
குறித்த மேம்படுத்தல் திட்டத்திற்கான வரைபு City of Stonnington-இடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குரிய அனுமதி கிடைத்தவுடன் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்படுமென இச்செயற்றிட்டத்திற்குப் பொறுப்பான Vicinity Centres தெரிவித்துள்ளது.
Chadstone விற்பனை அங்காடிக்கு ஆண்டுதோறும் சுமார் 24 மில்லியன் வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
