SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய மாணவர் விசாவுக்கான ஆங்கிலப் பரீட்சையில் மாற்றம்!

Australian Citizenship changes
Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

ஆஸ்திரேலியாவிற்கு மாணவர் விசாவில் வரவிரும்பும் ஒருவர் தனது ஆங்கிலப்புலமையை நிரூபிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டுமென்பது கட்டாயமாகும்.

இந்தநிலையில் TOEFL (Test of English as a Foreign Language) Paper-Based பரீட்சையை subclass 500 மாணவர் விசாவுக்காக ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டதாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த மே 27ம் திகதிக்கு பின்னர் இந்நடைமுறை அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TOEFL Paper-Based பரீட்சை ஊடாக ஒருவரது ஆங்கில பேச்சுத்திறமை புலப்படுவதில்லை என்பதால் கடந்த ஆண்டு அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின் அடிப்படையில் இப்பரீட்சை முடிவினை ஏற்றுக்கொள்வதில்லை என தீர்மானித்ததாக குறிப்பிடப்படுகிறது.

எனினும் TOEFL internet based பரீட்சை முடிவு உள்துறை அமைச்சால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இதுதவிர IELTS (International English Language Testing System), Cambridge English: Advanced (Certificate in Advanced English),  Pearson Test of English Academic and Occupational English Test ஆகிய பரீட்சைகள் உள்துறை அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now