இரா. சத்யநாதன்
- ChatGPT என்றால் என்ன?
- எவற்றுக்கெல்லாம் ChatGPT ஐப் பயன் படுத்தலாம்?
- ChatGPT எப்படி சாத்தியமாகிறது?
- Chat GPTயின் குறைபாடுகள் எவை?
- Google இதனை எப்படி சமாளிக்கும்?
ChatGPT என்ற AI என்ற artificial intelligence ஐ அடிப்படையாகக் கொண்ட Language Based Search Engine, இரண்டு மாதங்களுக்கு முன் அறிமுகமானது. 5 நாட்களில் 10 லட்சம் பேர் அதனோடு இணைந்து கொண்டார்கள். இன்றைய அதன் பெறுமதி 29 பில்லியன் அமெரிக்க டொலர்கள். பல லட்சம் பேர் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள்.

இருந்தபோதும் Googleஐ அது உடனடியாக நெருங்க முடியாது. சில வருடங்கள் எடுக்கலாம்.
உலகில் சுமார் 92 சதவீதமானோர் Googleஐத்தான் பிரதான search engine - தேடுதல் இயந்திரமாக அல்லது தேடுதல் பொறியாகப் பயன்படுத்துகிறார்கள். Google என்றாலே அதன் பொருள் ‘தேடுதல்’ என்பதாக, இப்போது பிரபல அகராதிகளில் உத்தியோக பூர்வமாக இடம்பெற்று விட்டது. Googleஐத்தவிர Bing, Amazon, Yahoo, Baidu, Yandex, DuckDuckGo என்று பல search engines கள் இருக்கின்றன. ரஷ்யாவில் 62 சதவீதமானோர் Yandexஐப் பயன்படுத்துகிறார்கள். சீனாவிலும் பெரும்பான்மை மக்கள் பயன்படுத்துவது Baidu ; Google அல்ல. ஜப்பான் தாய்வான் ஆகிய நாடுகளில் Yahoo தான் பிரபலம். இப்படி ஆங்காங்கே வேறு தேடுதல் இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப் பட்டாலும், உலக அளவில் பார்க்கும் போது, Google இன் சந்தைப்பங்கு திடமாக 92 சதவீதமாகவே இருக்கிறது. இது தற்செயலாக நிகழ்ந்தது அல்ல.

Stanford பல்கலைக்கழகத்தில் PhD மாணவர்களாகவிருந்த Larry Page, மற்றும் Sergey Brin ஆகியோரால் 1998 இல் search algorithm ஆக Backrub என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட Google, 2004 இல் உலகில் மிகப் பிரபலமான search engine ஆக வளர்ச்சி பெற்றது. இதைத்தொடர்ந்து, Google news, Gmail, Google maps, google street view, Google chrome, Google drive, Google home, Google assistant, Google cloud, Google groups, Google translator, Google lens, YouTube என்று பல கிளைகளை விரித்து இன்று உலகில் நம்பர் 2 tech company என்ற இடத்தில் Google இன் தாய் நிறுவனமான Alphabet இருக்கிறது. நம்பர் 1 இடத்தில் இருப்பது Apple. Apple இன் search engine, Safari என்று அழைக்கப்படுகிறது. இது Apple உபகரணங்களுக்கு மட்டும் பிரத்தியேகமானது. ஆனால் உலகில் நம்பர் 1 search engine Google தான். Google இன் இன்றைய மதிப்பு 1.14 trillion அதாவது 1140 பில்லியன் அமெரிக்க டொலர்கள். Apple இன் பெறுமதி 2 trillion. 2022 இல் Google search engine மூலமாக செய்த விளம்பர வருமானம் மட்டும் 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.
ஒரு தேடுதல் இயந்திரமாக Google அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது. இந்தச் சாதனை எளிதாக நடந்ததல்ல. ஆயிரக்கணக்கான தொழில்நுட்பவியலாளர்களின், பொறியியலாளர்களின், கணித மேதைகளின், அயராத உழைப்பு; research and development -ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் தளராத முதலீடு; கட்டமைப்பில் அபிவிருத்தி என்று ஒப்பாரும் மிக்காரும் இல்லா நிலையிலிருக்கும் Google இற்கு பெருஞ்சவாலாக சந்தையில் நுழைந்துள்ள நிறுவனம் தான் ChatGPT. எத்தனையோ சவால்களைச்சந்தித்த Google, ChatGPTயின் சவாலையும் சந்திக்குமா? Google இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுமா? என்பதே இன்று தொழில்நுட்ப உலகில் பேசப்படும் விவாதப் பொருளாகும்.
ChatGPT என்றால் என்ன, ஏன் Googleஐ விட சிறப்பான search engine என்று அது கருதப்படுகிறது?
ChatGPT என்றால் என்ன?
Artificial Intelligence என்ற செயற்கை நுண்ணறிவின் துணையோடு செயல்படும் ஒரு language-based search engine- தேடுதல் பொறி தான் ChatGPT. GPT என்பதன் விரிவாக்கம் Generative Pre trained Transformer model என்பதாகும். Open artificial intelligence மூலமாக உருவாக்கப்பட்ட, உரையாடும் ஆற்றலுள்ள, chat கணினி மாடலான ChatGPT, Open AI என்ற நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். ஆரம்ப காலத்தில் அதாவது 2015 இல் Elon musk மற்றும் சிலரால் இது ஆரம்பிக்கப்பட்டது. உரையாடும் ஆற்றல் உள்ளது என்று சொல்லும்போது, வாய்மொழி வழி உரையாடுவதல்ல. இந்த ChatGPT இற்குள் நுழைந்தால், உங்கள் தேடுதலை அல்லது கேள்வியை டைப் செய்ய ஒரு window திறக்கும். அதில் உங்கள் கேள்வியை எழுதினால் அது பதிலை அல்லது தகவலை டைப் செய்து தரும்.
உதாரணமாக உங்கள் கேள்வி “வரும் ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் காலநிலை எப்படி இருக்கும்?” என்பதாக இருந்தால் அது சிட்னியில் பல இடங்களிலும் எதிர்பார்க்கக் கூடிய கால நிலையைச் சொல்லும்.
“வரும் ஞாயிற்றுக்கிழமை நான் குடும்பத்தோடு கடற்கரைக்குப் போக யோசிக்கிறேன், எங்கு போகலாம்?” என்று நீங்கள் அடுத்துக் கேட்கக்கூடும்
பதில்: “நீங்கள் Wollongong கடற்கரைக்குப் போகலாம். அல்லது Jarvis bay போகலாம். மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்யும்” என்று சொல்லலாம்.
அடுத்த கேள்வி: “எனக்கு மிக அருகாமையில் உள்ள கடற்கரை எது?” என்றால்
பதில்: “Wollongong கடற்கரை தான்” இவ்வாறாக பதில் வரும்.
“நான் இன்று எனது 50 வயதான நண்பரின் பிறந்த நாள் விழாவில் பேசவேண்டும். நாங்கள் இருவரும் பால்யம் முதல் சினேகிதர்கள். ஒன்றாகப் படித்தவர்கள்” எனக்கேட்டால்,
நொடிப்பொழுதில் உங்களது உரையை ChatGPT தரும்.
இன்னும் கொஞ்சம் emotional ஆக செய்ய முடியுமா? என்றால்,
Emotional ஆன உரையாக அது மாற்றித் தரும்.
இந்த software ஐ உருவாக்க computer code ஐ தரமுடியுமா?
அடுத்த நொடி அந்த code ஐ வரிசைக்கிரம மாக அது தரும்.
நான் தயாரித்த இந்த code இல் error இருக்கிறது. சரிசெய்யமுடியுமா?
அந்த code ஐ paste செய்தால் அதைச்சரிசெய்து தரும்.
இப்படியாக உங்கள் தனிப்பட்ட தேவைக்கு ஏற்ற விதமான தீர்வுகளை வழங்கக்கூடியது ChatGPT.
சரி முதலாவது கேள்வியான அடுத்த ஞாயிறு நான் குடும்பத்தோடு கடற்கரைக்குப் போகவேண்டும். எங்கு போகலாம்? என்று google search machine இல் டைப் செய்தேன். பதில் என்ன தெரியுமா?
- Beach Song என்ற பாடலுக்கான YouTube link ஐ அது முதலில் தந்தது.
- குடும்பத்தோடு கடற்கரைக்குப்போகும் போது கொண்டு போகவேண்டிய 20 பொருட்களின் பட்டியல்.
- பாதுகாப்பாக கடற்கரைக்குப் நாளைக்கழிக்கவும் ஜாலியாகவும் இருக்க 6 tipsகள்
என்று தெரிவுகள் நீண்டு கொண்டே செல்கிறது.
ஆகவே ChatGPT என்பது உங்களோடு chat செய்யக்கூடிய, எல்லாம் தெரிந்த ஒரு நபருடன் நீங்கள் உரையாடுவது போன்ற அனுபவத்தையும் உங்களுக்கு வேண்டிய specific ஆன தகவலையும் தரவல்லது. ஆகவே செயற்கை நுண்ணறிவை அடிப்படையாவைத்து உங்களுடன் அறிவார்ந்த நிலையில் பேச ChatGPT பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

வேறு எவற்றுக்கெல்லாம் ChatGPT ஐப் பயன் படுத்தலாம்?
எந்த தலைப்புகளிலும் விரிவான அல்லது சுருக்கமான கட்டுரையை அல்லது தகவலைப் பெறமுடியும். செய்தி, மற்றும் பொருட்கள் தொடர்பான விபரங்கள் அல்லது மதிப்பீடுகள் என்பவற்றைப் பெறமுடியும்.
பிரச்சனைக்கு தீர்வுகாணமுடியும். உதாரணமாக எனது washing machine ஆல் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை; என்ன செய்வது?
அது சில தகவல்களை கேட்கக் கூடும்? என்ன Brand, என்ன மாடல்? எவ்வளவு காலம் பயன்படுத்தியது?
கேட்டுவிட்டு, உடனே தீர்வைச்சொல்லும்
சமூக ஊடகங்களில் ஒரு தகவலைப்பதிய உங்களுக்கு அந்த தகவலை வடிவமைத்து தரும்.
அறிக்கைகள், மின்னஞ்சல்கள் என்பவற்றை draft செய்து தரும்.
ஏராளமான தகவல்களைக்/ தரவுகளைக் கொடுத்து நீங்கள்எடுக்கக் கூடிய முடிவை/ தீர்மானத்தைக் கேட்டால் அதைச்சொல்லும்.

இது எப்படி சாத்தியமாகிறது?
ஏற்கனவே சொன்னதுபோல GPTஎன்பது transformer architecture என்ற அடிப்படையில் நிறுவப்பட்ட generative language model ஆகும். GPT 3 version இல் இருந்த இது 3.5 ஆக மாறி இனி version 4 வுக்குத் தாவப்போகிறது. இதில் 175 billion parameters இருப்பதால் இதற்கு தெரியாத தகவலோ, தீர்வோ இருக்கமுடியாது. இந்த system த்திற்கு பயிற்சி கொடுப்பதற்கு 8 million documents களும் 10 billion சொற்களும் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது.
மிகப்பெரிய பத்திரிகையாளர்கள், பத்திரிகை நிறுவனங்கள், சினிமா துறையிலுள்ளவர்கள், investigation துறையிலுள்ளவர்கள், programmers, coders, software engineers, ஆகியோர் ChatGPT ஐப் பயன்படுத்துகிறார்கள். பாடல்கள் எழுத, வசனங்கள் எழுத அல்லது ஒரு மேடைநாடகத்தை, தொலைக்காட்சி நாடகத்தை த்தயாரிப்பதற்கு என்று இன்னோரன்ன தேவைகளுக்கு ChatGPT பயன்பட்டுவருகிறது.பல கோடி website களில் உள்ள தகவல்களை இது ஒன்றிணைக்கவல்லது.

இதன் குறைபாடுகள் என்று எவற்றைச்சொல்லலாம்
Filters மற்றும் opacity என்பவை இதில் இல்லை என்பது முன்வைக்கப்படும் விமரிசனமாகும். அதாவது யாருக்கு என்ன தகவலை வழங்குவது என்ற filters இல்லை என்பதால் ChatGPT தரும் தகவல்கள் இளம் வயதினருக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும் என்பதும் opacity வெளிப்படத்தன்மையின்மை அற்றது என்றும் கொள்ளலாம். சில தகவல்கள், பல்வேறு இன, மத, சமூக குழுவினருக்கு ஏற்புடையதாக இல்லாமல் அமையலாம் என்பதும் பிரதான விமரிசனங்களாகும்.
பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள், கல்வி அமைச்சுகள், பல்கலைக்கழகங்கள் என்பன ChatGPTற்கு முழுமையான அங்கீகாரத்தை இன்னமும் வழங்கவில்லை. மாணவர்களின் critical thinking and problem solving skills – விமர்சன சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறமைகளை இது வளர்ப்பதாக இல்லை என்பது பிரதான விமர்சனமாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், ChatGPTயின் பாய்ச்சலை தடுத்து நிறுத்த முடியாது. அந்த அளவிற்கு பல மட்டங்களிலும் பிரயோசனமானது என்று தொழில்நுட்ப உலகம் சொல்கிறது.
Google இதை எப்படி சமாளிக்கும்?
தொடர்ந்து Google கடந்த பல வருடங்களாக செய்துவருவதுபோல - சிறு போட்டி நிறுவனங்களை அதிரடி விலைக்கு வாங்கி இணைத்துக்கொள்வதுபோல ChatGPT ஐ வாங்க முயற்சிக்கலாம். அல்லது Artificial intelligence என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த தேடுதலை தானே அறிமுகப்படுத்தலாம் என்று அவதானிகள் தெரிவிக்கிறார்கள்.
எப்படி இருந்தபோதும் Google இன் ஏகபோக கட்டுப்பாடு, முடிவுக்கு வரவேண்டும். Google நியாயமற்ற கடும் நிபந்தனைகளை நிறுவனங்களுக்கு எதிராகவும் அரசுகளுக்கு எதிராகவும் விதித்துவருகிறது; இது முடிவுக்கு வர ChatGPT போன்ற புதிய மேம்பட்ட search engine கள் சந்தைக்கு வரவேண்டும் என்றே பலரும் விரும்புகிறார்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
