SKIP TO MAIN CONTENT

Flu காரணமாக குழந்தை மரணம் - பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்!

Australians encouraged to get flu vaccination
Australians encouraged to get flu vaccination Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் Flu காரணமாக குழந்தை ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, Flu தடுப்பூசியை தமது பிள்ளைகளுக்கு தவறாமல் போடுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 3 முதல் ஜுலை 8 வரையான காலப்பகுதியில் Flu தாக்கத்திற்குள்ளான 19 பிள்ளைகள் சிட்னி சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணியில், அதில் ஒரு குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த 19 குழந்தைகளில் இரு குழந்தைகளுக்கு மட்டுமே Flu தடுப்பூசி போடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதார அதிகாரிகள், இலவசமாக வழங்கப்படும் Flu தடுப்பூசி தமது பிள்ளைகளுக்கு வழங்கப்படுவதை பெற்றோர் உறுதிசெய்துகொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வருடத்தின் Flu தாக்கும் காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள முதல் மரணம் இதுவாகும்.

கடந்த ஆண்டு இதேகாலப்பகுதியில் சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் Flu காரணமாக பாதிக்கப்பட்டிருந்தநிலையில், இவ்வருடம் 256 பேர் மாத்திரமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வருடம் Flu தாக்கம் மெதுவாகவே ஆரம்பித்துள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now