உலகளாவிய ரீதியில் குழந்தை வளர்ப்புக்கு சிறந்த நாடு எது என்று Pennsylvania பல்கலைக்கழகம் நடத்திய வருடாந்த கருத்துக்கணிப்பில் டென்மார்க் முதலிடத்தை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா ஒன்பதாவது இடத்தையும் இந்தியா 59 ஆவது இடத்தையும் இலங்கை 60வது இடத்தையும் பெற்றிருக்கின்றன.
2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த கருத்துக்கணிப்பு, இம்முறையும் 73 நாடுகளில் சுமார் 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்டது.
வசதியான கர்ப்பகால மற்றும் அதற்கு பின்னரான பணியிட விடுப்பு மற்றும் இலவச கல்வி - மருத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் டென்மார்க் குழந்தை வளர்ப்பில் முதலிடத்தையும் சுவீடன் இரண்டாம் இடத்தையும் நோர்வே மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. நியூஸிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு ஒரு இடம் முன்னதாக எட்டாவது இடத்திலும் லண்டன் 11 ஆவத இடத்தையும் அமெரிக்கா 18 ஆவது இடத்தையும் பெற்றிருக்கின்றன.
குழந்தை வளர்ப்புக்கு மோசமான இடங்களில் முதல் பத்து நாடுகளுக்குள் கஸகஸ்தான், லெபனான், மியான்மார், ஓமான், ஜோர்டான், சவுதி, வியட்னாம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
