சீனாவில் Coronavirus COVID-19 தொற்று பரவியிருக்கும் பிராந்தியங்களிலுள்ள மக்கள் பயன்படுத்திவரும் சீன பணத்தாள்களை தனிமைப்படுத்தி சுத்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, இந்த பிராந்தியங்களிலுள்ள வங்கிகளுக்கு மக்கள் கொண்டுவரும் பணத்தாள்களை மீண்டும் புழக்கத்திற்கு விடாமால், அவைகளை சுத்திகரிப்புக்கு உட்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
வங்கிகளிடம் வரும் சீன பணநோட்டுகளை நவீன முறைப்படி சுத்திகரிப்பு செய்து பதினான்கு நாட்கள் அந்த நோட்டுகளை புழக்கத்திற்கு விடாமல் நிறுத்திவைக்கவும், பின்னர் புழக்கத்திற்கு விடுவது என்றும் சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
குறிப்பாக Coronavirus COVID-19 தொற்று அதிகமாக பரவியிருக்கும் கூபே பிராந்தியத்திலுள்ள 600 billion yuan அதாவது சுமார் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான புதிய பண நோட்டுகளை புழக்கத்தில் விடவும், புழக்கத்தில் உள்ள நோட்டுகளை வங்கிகள் திரும்பப்பெற்று ultraviolet rays மூலம் அல்லது அதிக வெப்ப நிலையில் சுத்திகரிப்பது என்றும் அரசு முடிவு செய்துள்ளது.
