SKIP TO MAIN CONTENT

கொரோனா வைரசினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,600 ஐ தாண்டியது!

கொரோனா வைரசினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,600 ஐ தாண்டியது!

A medical worker waves near a propaganda poster
Source: AAP/Xinhua News Agency

1 min read

Published

Updated

By Raysel

Source: SBS


Skip to article content

Coronavirus COVID-19 உலகை தொடர்ந்து அச்சுறுத்திவரும் இவ்வேளையில், சீனாவில் இந்த வைரசுக்கு பலியான மக்களின் எண்ணிக்கை 1,600 ஐ தாண்டியுள்ளது. சீனாவுக்கு வெளியே  பிரான்ஸ், பிலிப்பின்ஸ், ஹாங்காங், ஜப்பான் என்று நான்கு நாடுகளிலும் முறையே ஒருவர் என்று நான்குபேர் உயிர் இழந்துள்ளனர்.

 

சீனாவில் Coronavirus COVID-19 வைரஸ் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை  68,000 பலியான மக்களின் எண்ணிக்கை 1,600 என்றும் கூறப்படுகிறது.   

 

சீனாவின் பிற இடங்களிலிருந்து தலைநகர் பெய்ஜிங் நகருக்கு வருகைதரும் மக்கள் பதினான்கு நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்தவேண்டும் என்றும், இவர்களை கண்காணிக்க போலீசாருக்கு தாம் உத்தரவிட்டிருப்பதாகவும் சீன அரசு கூறியுள்ளது.

 

இதற்கிடையில் ஜப்பான் நாட்டின் யோககாமா துறைமுகத்தில் தரித்து நிற்கும் Diamond Princess எனும் சர்வதேச சுற்றுலா பயணி கப்பலில் தனிமைப்படுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பயணிகளில் இன்று மேலும் புதிதாக எழுபது பேருக்கு  Coronavirus COVID-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த கப்பலிலுள்ள பயணிகளில்  355 பேருக்கு இந்த வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பலில் மொத்தம் 3,700 பயணிகளும் பணியாளர்களும் இருப்பதால் சுமார் பத்து சதமானவர்களுக்கு Coronavirus COVID-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்த பயணிகளில் சுமார் 200 பேர் ஆஸ்திரேலிய நாட்டைச் சார்ந்தவர்கள் ஆவர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now