SKIP TO MAIN CONTENT

சிகரெட் பிடித்துவிட்டு காரிலிருந்து வீசியெறியும் ஓட்டுநர்களுக்கான அபராதம் அதிகரிப்பு!

Tossing Lit cigarette
Source: NSW Government

1 min read

Published

Updated


Skip to article content

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிகரெட் பிடித்துவிட்டு அதன் அடித்துண்டினை காரிலிருந்து வெளியே வீசும் ஓட்டுநர்களுக்கான அபராதத்தை அதிகரிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி புகைப்பிடித்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் சிகரெட் துண்டினை கார் கண்ணாடி வழியாக வீசுபவர்கள் 5 demerit புள்ளிகளை இழக்கவுள்ளனர்.அதேநேரம் total fire ban-தகனத்தடை விதிக்கப்பட்ட நாட்களில் இவ்வாறு நடந்துகொள்பவர்கள் அந்த இடத்திலேயே 10 demerit புள்ளிகளை இழக்கும் அதேநேரம் சுமார் 11 ஆயிரம் டொலர்கள் வரையான தண்டப்பணமும் செலுத்த நேரிடும்.

இதுவரை காலமும் இதற்கான தண்டப்பணம் 660 டொலர்களாகவும் தகனத்தடை நாட்களில் 1320 டொலர்களாகவும் காணப்பட்டது.

10 demerit புள்ளிகள் அபராதம் என்பது- P plate அல்லது L plate ஓட்டுநர்களைப் பொறுத்தவரை ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தை அந்த இடத்திலேயே இழப்பதற்கு ஒப்பானதாகும்.

இச்சட்டம் ஜனவரி 17 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now