ஓய்வூதியம் பெறும் புலம்பெயர் பின்னணி கொண்ட முதியவர்கள் மற்றும் சென்டர்லிங்க் கொடுப்பனவு பெறும் முன்னாள் வீரர்கள், விதவைகள் உள்ளிட்டோர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான விண்ணப்பத்தொகையில் வழங்கப்பட்ட சலுகை ரத்துச் செய்யப்படுகிறது.
சாதாரணமாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் சுமார் 285 டொலர்களை அதற்கான விண்ணப்பத்தொகையாக செலுத்தவேண்டியுள்ள நிலையில் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் விதவைகள் வெறுமனே 20 அல்லது 40 டொலர்கள் மட்டுமே செலுத்த வேண்டியிருந்தது.
இந்தநிலையில் குறித்த சலுகையை எதிர்வரும் ஜுலை 1 முதல் நீக்குவதற்கான நாடாளுமன்ற ஆவணங்களை உள்துறை அமைச்சர் Peter Dutton கடந்த வாரம் சமர்ப்பித்துள்ளார்.
இதையடுத்து pensioner concession card வைத்திருப்பவர்கள் Newstart, aged pension, disability support pension, parenting payments உள்ளிட்ட கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது அதற்கான முழு கட்டணத்தையும் செலுத்தவேண்டியிருக்கும்.
எனினும் அரசின் இந்நகர்வானது நியாயமற்றது எனத் தெரிவித்துள்ள கிரீன்ஸ் கட்சி, நாடாளுமன்றில் இதனைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகள் அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
Share
