SKIP TO MAIN CONTENT

மந்தகதியில் குடியுரிமை விண்ணப்ப பரிசீலனை! பத்தில் ஒருவர் 2 வருடங்கள் வரை காத்திருப்பு!!

ஆஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்த ஒருவர் அதற்காக காத்திருக்கும் காலப்பகுதி சராசரியாக 13 மாதங்கள் எனவும், பத்தில் ஒரு விண்ணப்பதாரி 24 மாதங்கள் வரை காத்திருக்கவேண்டியுள்ளதாகவும் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

Changes announced to lodgement arrangements for Australian citizenship from 1 November
Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

மேலும் சிலரது குடியுரிமை விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் செல்வதாகவும், 90 வீதமான விண்ணப்பங்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் பரிசீலிக்கப்பட்டுவிடுவதாகவும் உள்துறை அமைச்சு தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்துவிட்டு, அதற்காக இவ்வளவு நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலைமை ஒருபோதும் ஏற்புடையதல்லவென எதிர்கட்சியான லேபர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அதேநேரம் குடியுரிமை விண்ணப்ப பரிசீலனைக்கான சராசரி காத்திருப்பு காலம் 13 மாதங்கள் எனத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சு, நாட்டில் ஏற்பட்ட கோவிட் பரவல், விண்ணப்ப பரிசீலனை நடைமுறைகளை மிகவும் கடினமாக்கியிருந்ததாக தெரிவித்துள்ளது.

கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக விண்ணப்பதாரிகளை நேருக்கு நேர் சந்திக்க முடியாதமை உள்ளிட்ட பல்வேறு காரணிகள், இத்தாமதத்திற்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ள உள்துறை அமைச்சு, இயன்றவரை இச்செயற்பாட்டில் நிலவும் தாமதத்தை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக குறிப்பிட்டுள்ளது.

பல்கலாச்சார பின்னணி கொண்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் ஆஸ்திரேலிய அரசின் ஈடுபாடு குறைவடைந்தமையே இத்தாமதத்திற்கான காரணி எனக் குறிப்பிட்டுள்ள லேபர் கட்சியின் Andrew Giles, அரசின் இந்த அசமந்தபோக்கு காரணமாக, நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமை பல்லாயிரக்கணக்கானோருக்கு இல்லாமல்போயுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இதேவேளை ஜனவரி 2020 தொடக்கம் டிசம்பர் 2021 வரையான காலப்பகுதியில், நேரடியாக அல்லது இணையவழி நிகழ்வு ஊடாக, சுமார் 314,000 பேருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now