SKIP TO MAIN CONTENT

நீங்கள் Coca-Cola குளிர்பானம் அருந்துபவரா?

Cans of Coca Cola No Sugar
Coke's new No Sugar variant won't be appearing on Woolworths shelves. (AAP) Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

Coca-Cola நிறுவனத்தின் முக்கிய குளிர்பானங்களில் ஒன்றான Coke Zero, ஆகஸ்ட் 1 முதல் ஆஸ்திரேலிய சந்தைகளில் விநியோகிக்கப்படமாட்டாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தங்களது குளிர்பானங்களில் சீனியின் அளவை குறைக்கப்போவதான அறிவிப்பினை விடுத்து இரண்டு மாதங்களில் Coke Zero விநியோக நிறுத்தம் தொடர்பான தகவலை Coca-Cola நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக Coca-Cola நிறுவனத்தின் ஆஸ்திரேலிய சந்தைப்படுத்தல் பணிப்பாளர் Lucie Austin கூறும்போது - தங்களது நிறுவனம் அறிமுகம் செய்த Coke Zero மற்றும் Coke no Sugarபானங்களில் வாடிக்கையாளர்கள் Coke no Sugar குளிர்பானத்தையே அதிகம் விரும்புகிறார்கள். ஆகவே, அவர்களில் விருப்பத்துக்கு இணங்க Coke zero விநியோகத்தை ஆஸ்திரேலிய சந்தைகளிலிருந்து களைந்துவிட்டு Coke no sugar விநியோகத்தை அதிகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் Coke no sugar குளிர்பானம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் சுமார் 3.5 மில்லியன் பேர் இதனை விரும்பி அருந்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குளிர்பானங்களில் உள்ள அபரிமிதமான சுவையின் அளவு பல்வேறு நோய்க்கூறுகளுக்கு காரணமாக அமைவதாக வாடிக்கையாளர்கள் கரிசனையடைய தொடங்கியதை அடுத்து Coca-Cola நிறுவனம் 1982 இல் Diet Coke பானத்தை அறிமுகம் செய்தது.

அதன் தொடர்ச்சியாக 2006 இல் Coke Zero பானத்தை சந்தையில் அறிமுகம் செய்தது. 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் Coke no sugar அறிமுகமாகி சந்தைகளில் பிரபலமானது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now