SKIP TO MAIN CONTENT

ஊழியர்கள் பணத்தை கொள்ளையடித்த Coles

ஆறு வருடங்களில் $20 மில்லியன் தொகை சம்பளம் தாம் வழங்கவில்லை என்பதை Coles நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

Coles
Source: AAP

1 min read

Published

By Kulasegaram Sanchayan


Skip to article content

1,150 பேருக்கு அல்லது ஒரு சதவீத ஊழியர்களுக்கு ஒழுங்காக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் Coles நிறுவனம் சொல்லியுள்ளது.  அந்தத் தொகையில் சம்பளமும் General Retail Industry Award (GRIA) எனப்படும் மேலதிக தொகையும் வழங்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட Coles supermarket ஊழியர்களுக்குக் கொடுபடாத $12 மில்லியன் தொகை மற்றும் அதற்கான வட்டியாக $4 மில்லியன் தொகையும், மது Coles விற்பனை நிலைய ஊழியர்களுக்கு ஊழியர்களுக்குக் கொடுபடாத $3 மில்லியன் தொகை மற்றும் அதற்கான வட்டியாக $1 மில்லியன் தொகையும் வழங்க இருப்பதாகக் கூறிய நிர்வாக இயக்குனர் Steven Cain, ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார்.

இப்படியான தவறுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தாம் அனைத்து முயற்சிகளும் எடுப்போம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

அண்மையில் Woolworths நிறுவனமும் ஊழியர்களுக்கு $300 மில்லியன் தொகை சம்பளம் உரிய முறையில் வழங்கவில்லை என்று ஒப்புக் கொண்டமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now