ஆஸ்திரேலியாவின் பிரதான வங்கிகளில் ஒன்றான Commonwealth Bank தனது 114 கிளைகளை தற்காலிகமாக மூடப்போவதாக அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்காரணமாக தங்களது வங்கிகளுக்கு வருகைதரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அரைவாசியாக குறைந்திருப்பதாலும் இணையவழி சேவையை நாடும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளமையும் இதற்கான காரணங்கள் என்று Commonwealth வங்கித்தரப்பு தெரிவித்துள்ளது.
வங்கிகள் தற்காலிகமாக மூடப்படுவதால் குறிப்பிட்ட கிளைகளில் பணிபுரியும் சுமார் ஐந்நூறு பணியாளர்கள் call centres மற்றும் online வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் பிரதான வங்கிகள் அமைந்துள்ள இடங்களிலிருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்திற்குள் உள்ள வங்கிகளே இவ்வாறு மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது வாடிக்கையாளர்களுக்கான அனுசரணைகளை தொலைபேசி வழியாக வழங்குவதற்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வங்கியின் பிரத்தியேக செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் தங்களது அன்றாட அலுவல்களை மேற்கொள்ளலாம் என்றும் Commonwealth வங்கி தெரிவித்துள்ளது.
Commonwealth வங்கியின் எந்தக்கிளைகள் மூடப்படுகின்றன என்ற விவரங்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
Share
