SKIP TO MAIN CONTENT

Commonwealth Bank வாடிக்கையாளர்களுக்கு $50 "அதிஷ்டம்"

Customers use a Commonwealth Bank (CBA) ATM.
Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

தமது வங்கிக்கணக்குகளில் கடந்த வாரம் ஏற்பட்ட பணப்பரிவர்த்தனை தாமதம் காரணமாக அசௌகரியங்களை எதிர்நோக்கிய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் Commonwealth வங்கி ஐம்பது டொலர்களை கொடுத்திருக்கிறது.

Commonwealth வங்கியின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த வியாழக்கிழமை பல்லாயிரக்கணக்கான வாடிக்கையளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சுமார் 12 மணி நேரமாக இணையவழி பபணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளமுடியாமல் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

அந்த 12 மணிநேர காலப்பகுதியில் debit அட்டைகளின் வழியாகவும் Commonwealth வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.

அன்றைய தினம் ஊதியம் பெறவிருந்தவர்களுக்கான பணம் கூட வைப்பு செய்யப்படவில்லை. பலர் அத்தியாவசிய தேவைகளை கொள்முதல் செய்வதில்கூட சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த ஒட்டுமொத்த அசௌகரியத்துக்கு பரிகாரமாக, பாதிக்கப்பட்டதாக கருதப்படும் Commonwealth வங்கியின் சுமார் ஒன்றரை லட்சம் வாடிக்கையாளர்களுக்கு தலா 50 டொலர் பணம் அவர்களது கணக்குகளில் வங்கியால் வைப்பு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பலர் இந்தப்பணம் தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now