SKIP TO MAIN CONTENT

Tax Return சமர்பிக்காதவர்களுக்கான அபராதம் அதிகரிப்பு!!

வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறியது உள்ளிட்ட பெடரல் குற்றங்களுக்கான அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Census fine
Source: AAP

2 min read

Published

Updated

By Selvi

Source: SBS


Skip to article content

பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டு முதல் பெடரல் குற்றங்களுக்கான அபராத தொகையை அதிகரிப்பதாக பெடரல் அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜனவரி முதலாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

Commonwealth அரசு விதிக்கும் பெடரல் குற்றங்களுக்கான அபராதங்களின் அடிப்படைத் தொகை $222-இல் இருந்து $275 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறுபவர்களுக்கான அபராதம் $1375-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

25 அக்டோபர் 2022 அன்று வெளியிடப்பட்ட பெடரல் நிதிநிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து இதற்கான சட்ட திருத்தம் கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

2023 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி மற்றும் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் CPI அதிகரிப்புக்கு ஏற்ப இந்த தொகையும் அதிகரிக்கப்படும். ஆகவே அடுத்த அதிகரிப்பு அடுத்த நிதியாண்டு ஆரம்பத்தில் ஜூலை முதலாம் தேதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளில் 31 மில்லியனுக்கும் அதிகமான தொகையை பெடரல் அரசு ஈட்டுவதே இந்த உயர்வின் பின்னணியில் உள்ள நோக்கம் என்று நிதிநிலை அறிக்கை ஆவணங்கள் கூறுகின்றன.

Tax return, தகவல் தொடர்பு, நிதி மற்றும் மோசடி தொடர்பான குற்றங்களுக்கு பொதுவாக Commonwealth அபத்தங்கள் விதிக்கப்படும். இதில் கூடுதலாக வரிக் கணக்கை தாக்கல் செய்யத் தவறுபவர்களுக்கே விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

வரி செலுத்துவோர் தங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்யத் தவறியதற்காக $1100 அல்லது ஐந்து தவணைகளில் $222 வரை செலுத்தவேண்டும் என்றிருந்த அபராத தொகை $1375 அல்லது ஐந்து தவணைகளில் $275 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now