SKIP TO MAIN CONTENT

Commonwealth வாடிக்கையாளர்களே கவனம்! இணையத்திருடர்களின் புதிய முயற்சி அம்பலம்!!

Commonwealth Bank
Commonwealth Bank Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

Commonwealth வங்கி பயனாளர்களின் கணக்குகளை புதிய வழிமுறையில் சூறையாடுவதற்கு கடந்த சில நாட்களாக இணையத்திருடர்கள் முயற்சிசெய்துவருவதாக ஆஸ்திரேலிய இணைய பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை முதல் தங்களால் கண்டறியப்பட்டுள்ள இந்த இணையத்திருட்டு குறித்து பயனாளர்கள் மிகக்கவனமாக செயற்படுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Commonwealth வங்கியின் சுமார் ஒரு கோடி 59 லட்சம் வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்படுகின்ற அநாமதேய கடிதம் ஊடாவே இந்த இணையத்திருட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வழமைக்கு மாறான நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டிருப்பதாக இந்த அநாமதேய மின்னஞ்சல் எச்சரிக்கை செய்வதாகவும், அந்த மின்னஞ்சலை திறந்து Commonwealth வங்கி இணையத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்துவதாகவும், அவ்வாறு வாடிக்கையாளர்களை அழைத்துச்செல்லுகின்ற போலி வங்கி இணையத்தளத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் கடவுச்சொல் மற்றும் இதர விவரங்களை பெற்று இந்த இணையத்திருட்டினை மிகச்சுலபமாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அநாமதேய மின்னஞ்சலின் வழியாக அழைத்துச்செல்லப்படுகின்ற போலி Commonwealth வங்கி இணையத்தளம் Commonwealth வங்கியின் உண்மையான இணையத்தளம் போலவே உள்ளதாகவும் இதன்வழியாக சென்று வாடிக்கையாளர்கள் ஏமாறுவதற்கு போதிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் இணையப்பாதுகாப்பு பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now