ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்புமுகாம்களிலுள்ள அகதிகளுக்கு இரக்கம் காட்டினால் ஆஸ்திரேலியா நோக்கி வரும் படகுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என உள்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
புகலிடக்கோரிக்கையாளர்களின் படகுகள் தொடர்ந்தும் வருவதாகத் தெரிவித்த அவர், மனுஸ் மற்றும் நவுறு முகாம்களிலுள்ள அகதிகளை ஆஸ்திரேலியாவிற்குள் அழைத்துவந்தால் அது ஆட்கடத்தல்காரார்களின் செயற்பாடுகளுக்கு தீனிபோடுவதாக அமையும் என வாரப்பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்முகத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு முதல் 131 பேருடன் இலங்கையிலிருந்து வந்த படகு இடைநிறுத்தப்பட்டதாகவும், சுமார் 14 ஆயிரம் பேர் இந்தோனேசியாவில் இன்னமும் காத்திருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் Peter Dutton, ஆஸ்திரேலியாவுக்கு செல்லக்கூடிய சாத்தியம் விரைவில் உருவாகும் என்ற பரவலான எதிர்பார்ப்பு ஆட்கடத்தல் முகவர்கள் மத்தியில் காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மனுஸிலிருந்து 20 பேரை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவதன் மூலம் படகுப் பயணங்களை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து கடின உழைப்பும் ஒரே இரவில் பயனற்றுப்போய்விடும் என்பதை கடல்கடந்த தடுப்பு முகாமிலுள்ளவர்களை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரவேண்டும் என குரல்கொடுப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென Peter Dutton சுட்டிக்காட்டியுள்ளார்.
Share
