ஐந்து முதல் ஒன்பதாம் ஆண்டுகளில் பயிலும் 4,600 மாணவர்கள், Speak Out Against Racism (SOAR) என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் கலந்து கொண்டார்கள். முப்பத்தொரு சதவீத மாணவர்கள் பாடசாலைகளில் இனப்பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளதாகவும் மூன்றில் ஒரு மாணவர் (27 சதவீதம்) சமூகத்தில் இனப்பாகுபாட்டை அனுபவித்திருப்பதாகவும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. மேலும் 10 மாணவர்களில் 6 பேர் இனப்பாகுபாடு காட்டப்படுவதை அவனித்தானித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் (ANU) மற்றும் மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் (WSU), ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் விக்டோரிய மாநில மற்றும் NSW மாநில கல்வித் துறைகள் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளார்கள்.
இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள் எச்சரிக்கை தருகின்றன என்றும் “உடனடி நடவடிக்கைக்கு ஒரு முக்கியமான அறைகூவல்” என்றும் இந்த ஆய்வை வழி நடத்திய ANU துணைப் பேராசிரியர் Naomi Priest கூறினார்.
"குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் வளரவும், செழிக்கவும் பாதுகாப்பான சூழலில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்" என்று Naomi Priest மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்தி

Church backs ‘distressed’ youth on school climate strikes
இனவெறி மற்றும் இனப்பாகுபாடு தவிர்க்கப் படக் கூடியது, மற்றும் நியாயமற்றது. இருந்தாலும், ஆஸ்திரேலியப் பூர்வீக மக்கள் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், மற்றும் ஆஸ்திரேலியாவிற்குக் குடிவந்த பல்லின பின்னணியைச் சேர்ந்தவர்கள் இனப்பாகுபாட்டை அதிக அளவில் எதிர்கொள்கின்றனர்.
"இனவெறி மற்றும் இனப்பாகுபாடு, கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை மட்டுப்படுத்துகின்றன, அதை எதிர் கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் கடுமையான விளைவுகளை அனுபவிக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம்.
ஆஸ்திரேலியப் பூர்வீகப் பின்னணியைச் சேர்ந்த 20 சதவீத மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து பாகுபாட்டை அனுபவித்ததாக இந்த ஆய்வில் கூறினர்.
ஆஸ்திரேலியாவிற்குக் குடிவந்த பல்லின பின்னணியைச் சேர்ந்த மாணவர்களில் 18 முதல் 30 சதவீதம் பேர் இதே போன்ற அனுபவங்களைப் பதிவு செய்துள்ளனர். மத்திய கிழக்காசியா மற்றும் ஆபிரிக்க பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் மிக அதிகமாக இனப்பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள்.
அரச பாடசாலைகளில் இனப்பாகுபாட்டைக் குறைப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று, WSU ஆராய்ச்சி பேராசிரியர் Kevin Dunn கூறினார்.
“இனவெறி மற்றும் இனப்பாகுபாட்டை நிவர்த்தி செய்ய உதவும் திட்டங்களை, பாடசாலைகள் அனைத்திலும் மட்டுமல்ல, பரந்த சமூகத்திலும் உருவாக்குவது மிகவும் அவசியமான மற்றும் அவசரமான பணிகளில் ஒன்றாகும்” என்று Kevin Dunn மேலும் கூறினார்.
“இனப்பாகுபாட்டை அடையாளம் கண்டு, அதை முறையிடுவதற்கான தன்னம்பிக்கையை ஒருவரிடையே வளர்ப்பது, அடுத்த தலைமுறையை மேம்படுத்துவதற்குத் தேவையான ஒரு முக்கிய அங்கமாகும்.”