SKIP TO MAIN CONTENT

மனுஸ் அகதிகளுக்கான மருத்துவ உதவிகள் தொடர்பில் நிச்சயமற்ற நிலை!

SBS
Source: SBS World News

1 min read

Published

Updated



Skip to article content

மனுஸ் தீவில் உள்ள அகதிகளின் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்கிவரும் IHMS அமைப்பின் ஒப்பந்த பணிக்காலம் நாளை திங்கட்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் அங்குள்ளவர்களுக்கு மருத்து வசதிகளை வழங்கப்போகும் புதிய அமைப்பின் பணிகள் குறித்து குழப்பநிலைகள் எழுந்துள்ளன.

குடிவரவுத்திணைக்களத்துடனான IHMS அமைப்பின் ஒப்பந்த பணிக்காலம் நாளை திங்கட்கிழமையுடன் நிறைவடைகின்ற நிலையில் இந்த அமைப்பின் ஒப்பந்தம் நீடிக்கப்படவில்லை. அதேவேளை, புதிய அமைப்பின் பெயரும் வெளியிடப்படவில்லை.

செவ்வாய்க்கிழமையிலிருந்து மனுஸ் தீவிலுள்ள தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான புதிய மருத்துவ அமைப்பு தனது பணியை ஆரம்பிக்கும் என்று குடிவரவுத்திணைக்களத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த விடயத்தில், வெளிப்படைத்தன்மை எதுவுமில்லாது குடிவரவுத்திணைக்களம்  செயற்படுவதாக அகதிகள் நல அமைப்புகள் தரப்பில் பலத்த விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IHMS அமைப்பு ஆஸ்திரேலியாவிலும் அதற்கு வெளியிலும் குடிவரவுத்திணைக்களத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் அகதிகள் முகாம்களில் பன்னெடுங்காலமாக மருத்துவ பணிகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now