SKIP TO MAIN CONTENT

முகநூலில் அவதூறு: பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய எம்.பிக்கு $875,000 நட்டஈடு கொடுக்குமாறு உத்தரவு!

court order
Source: Public Domain

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவின் National கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Anne Webster-க்கு எதிராக முகநூலில் அவதூறு பரப்பிய பெண்ணுக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியிருக்கிறது.

குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அவரது கணவருக்கும் அவர்கள் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனத்துக்கும் மொத்தமாக 875,000 டொலர்களை நட்ட ஈடாக கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Anne Webster மற்றும் அவரது கணவரால் நிறுவப்பட்ட-  தாய்மாருக்கான தொண்டுநிறுவனம், குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற வலையமைப்பில் இயங்குகிறது என்றும் இந்த தொண்டுநிறுவனம் பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் பண்டங்களாக பயன்படுத்துகிறது என்றும்- பெண்ணொருவர் முகநூலில் தொடர்ச்சியாக பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட நட்ட ஈடு கோரும் வழக்கின்மீது தீர்ப்பு வழங்கும்போதே நீதிபதி, குறிப்பிட்ட அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றத்துக்காக நாடாளுமன்ற உறுப்பினருக்கு மூன்றரை லட்சம் டொலர்களையும் அவரது கணவருக்கு இரண்டு லட்சத்து 25 ஆயிரம் டொலர்களையும் குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்துக்கு மூன்று லட்சம் டொலர்களையும் நட்டஈடாக வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now