SKIP TO MAIN CONTENT

நீங்கள் free range முட்டை உண்பவரா?

Free-range eggs sold in Western Australia
Free-range eggs sold in Western Australia Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

ஆஸ்திரேலியாவில் விற்கப்படும் free range முட்டைகளுக்கு நேற்றுமுதல்(26.04.2018) புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முட்டை உற்பத்தியாளர்கள், Australian Competition and Consumer Commission (ACCC)-இன் விதிமுறைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படும் முட்டைகளை மாத்திரமே free range முட்டைகள் என்ற பெயரில் விற்க முடியும்.

குறித்த விதிமுறைகளுக்கு அமைய உற்பத்தி செய்யப்படாத முட்டைகளின் பெட்டிகளின் மேல் free range என்ற வார்த்தையை இனிமேல் பயன்படுத்த முடியாது.

இதன் காரணமாக நாம் வாங்கும் முட்டை உண்மையிலேயே free range தான் என்ற உத்தரவாதம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ACCC-இன் விதிமுறைகளின்படி, முட்டையிடும் பருவத்திலுள்ள கோழிகள் சூரிய ஒளி இருக்கும் நாட்களில் சுதந்திரமாக உலாவ விடப்பட வேண்டும் என்பதுடன் ஒரு ஹெக்டயரில் பத்தாயிரம் கோழிகளுக்கு மேல் வளர்க்க முடியாது. இப்படியாக வளர்க்கப்படும் கோழிகள் இடும் முட்டைகள் மாத்திரமே free range முட்டைகள் என்ற தகுதியைப் பெறும்.

இதுவரை நாட்களும் பல உற்பத்தியாளர்கள் முட்டை விற்பனையை அதிகரிப்பதற்காக, free range என்ற வார்த்தையை  தமக்கேற்றபடி பயன்படுத்தி வந்ததாகவும் இனிமேல் அதற்கு வாய்ப்பு இல்லை எனவும் ACCC தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now