SKIP TO MAIN CONTENT

தெற்கு ஆஸ்திரேலியாவில் குடியமர்வதற்கான தொழிற்பட்டியலில் சில தொழில்கள் மீண்டும் சேர்ப்பு!

Victoria 190 & 491 Visa nomination places updated
Source: SBS

1 min read

Published


Skip to article content

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் குடியமர்வதற்கு விண்ணப்பிக்கக்கூடிய தொழில்கள் அடங்கிய பட்டியல்-Skilled Occupations List  அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்த சில தொழில்கள் இவ்வருடத்திற்கான புதிய பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக Cook, Motor Mechanic, Management Accountant, External Auditor உள்ளிட்ட தொழில்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 8ம் திகதி வெளியிடப்பட்ட புதிய தொழிற்பட்டியலின்கீழ் subclass 190, subclass 491 ஆகிய விசா பிரிவுகளின் ஊடாக தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

தற்போதையநிலையில் வெளிநாடுகளிலிருந்துகொண்டு இவ்விசா பிரிவுகளின்கீழ் விண்ணப்பிக்க முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதுப்பிக்கப்பட்ட தொழிற்பட்டியலை இந்த இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.

Disclaimer: We’d like to point out that the information contained in this segment is general and is not specific advice. If you would like accurate information relevant to your situation, you should ask a registered migration agent.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now