SKIP TO MAIN CONTENT

சமையல் எரிவாயு (cooking gas) உடல் நலத்திற்கு தீங்குவிளைவிக்கிறதா?

ஆஸ்திரேலியாவில் சுமார் 40 சதவீதமான வீடுகளில் குழாய் மூலமாக விநியோகிக்கப்படும் gas எரிவாயு சமையலுக்கும் வீட்டை சூடாக வைத்துக்கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த எரிவாயு பாதுகாப்பானது அல்ல என்றும் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அண்மையில் வெளிவந்துள்ள ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

A gas burner on a hob cooking appliance
A gas burner on a hob cooking appliance Source: Press Association

5 min read

Published

By R.Sathiyanathan


Skip to article content

சமையலுக்கும் மற்றும் வீட்டை வெப்பமாக்குவதற்கும் gas என்ற எரிவாயுவைப் பயன்படுத்துவதன் காரணமாக ஆஸ்துமா மற்றும் சுவாசப்பை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று அந்த புதிய ஆராய்ச்சி அறிக்கை சொல்கிறது.

Professional Chefs என்ற சமையல்காரர்களைக் கேட்டாலும் அல்லது வீடுகளில் சமையல் செய்பவர்களைக் கேட்டாலும் அவர்களது ஏகோபித்த தெரிவு gas cook top- சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தக்கூடிய அடுப்பு தான். சூடு பரவும் வேகம், சூட்டை கட்டுப்படுத்தும் ஆற்றல், பல்வேறு வகையான சமையல் பாத்திரங்களுக்கும் ஏற்றவிதமாக சூட்டை செம்மைப்படுத்தக்கூடிய தன்மை என்பன காரணமாக சமையலறையில் gas சமையல் வாயு இருப்பது பெரும் அனுகூலமாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல குளிர்காலத்தில் வீட்டின் உட்புறத்தை சூடாக வைத்திருக்க, gas ducted central heating மற்றும் gas heaters என்பவை மின்சாரத்தைவிட செலவு குறைந்தவை, ஆற்றல் மிக்கவை என்பதே பரவலான நம்பிக்கையாகும். ஆனால் gas என்ற எரிவாயுவைப் பயன்படுத்துவதன்காரணமாக ஆஸ்துமா மற்றும் சுவாசப்பை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் எனும் ஆராய்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman cooking homemade pancakes for breakfast
Source: Justin Paget/ Digital Vision

Gas - எரிவாயு சுற்றாடலை மாசுபடுத்தாத எரிபொருள் என்றுதானே இதுவரை நம்பப்பட்டு வந்தது. விறகு மற்றும் நிலக்கரி என்பவற்றோடு ஒப்பிடுகையில் சமையல் எரிவாயு சுற்றாடலை அந்த அளவுக்கு மாசு படுத்தாது என்று கூறப்பட்டாலும் அது ஒரு fossil fuel புதை படிம எரிபொருள் என்பதும் green house gases என்ற பசுமை இல்ல வாயுக்களை அது வெளியேற்றும் என்றே சொல்லப்பட்டுவந்தது. அதே வேளையில் gas ஐ பூமியிலிருந்து எடுப்பது extraction மற்றும் அதைப் பயன்பாட்டுக்கு கொண்டுவருவது processing என்பன போன்ற படிமுறைகள் காரணமாக நீர்நிலைகள் மாசுபடுவதாகவும் (water contamination) மற்றும் வளிமண்டலத்திலுள்ள காற்று மாசுபடுவதாகவும் (air pollution) தொடர்ந்து கூறப்பட்டு வந்தாலும் சமையல் வாயு வீடுகளில் பயன்படுத்தப்படுவதால், மனிதர்க்கு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு ஏற்படக்கூடிய நலம் சார்ந்த பாதிப்புகள் பற்றி இதுவரை பெரிதாகப் பேசப்படவில்லை.

நாம் தினமும் சராசரியாக 80 முதல் 90 சதவீத நேரத்தை வீட்டினுள்ளேயே கழிப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஆகவே வீட்டினுள் இருக்கும் காற்றின் தரம் (quality) நமது உடல் நலத்தைப் பாதிக்கும் என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

வீட்டினுள் நாம் பயன்படுத்தும் தொற்று நீக்கிகள், பூச்சி கொல்லிகள், household cleaning and personal care products, துப்பரவு செய்ய மற்றும் வாசனை spray, shaving cream போன்றவை, cigarettes smoke சிகரட் புகை, mould என்ற பூஞ்சன நீக்கிகள் மற்றும் gas அடுப்புகள், gas heaterகள் எல்லாமே வீட்டினுள் உள்ள காற்றின் தரத்தைப் பாதிக்கின்றன. இவற்றுள் குறிப்பாக gas எரிவதால் பல வேதியல் பொருட்களும் வாயுக்களும் வெளியேறுகின்றன.

Cleaning products
Source: AAP

Gas எரியும் போது மனித நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் carbon monoxide, nitrogen dioxide மற்றும் formaldehyde போன்றவை வெளியேறுகின்றன. இதைத்தவிரவும், இந்த combustion என்ற எரிதலின் போது extremely small particles என்ற மிக மிகச்சிறிய துகள்கள், மூக்கு மற்றும் தொண்டை வழியாக நமது சுவாசப்பையைச் சென்றடைகின்றன. இவை fine particulate matter அல்லது ultra fine fine particles என்றழைக்கப்படுகின்றன.

முன்பு asbestos குறித்தும் புகைத்தல் குறித்தும் செய்யப்பட்டுவந்த எச்சரிக்கைகள் காரணமாக அவை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் பற்றி நாம் கவனஞ்செலுத்தத் தொடங்கியது போல இன்று சமையல் gas காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது குறித்து வலியுறுத்த வேண்டியிருப்பதாக Climate Council ஐச்சேர்ந்த பேச்சாளர் Dr. Kate Charlesworth கூறுகிறார்.

இந்த சமையல் gas எரிவதன் காரணமாக நோய்களும் ஏற்படுகின்றன. Climate Council அறிக்கையின் படி, gas எரிக்கப்படும் போது வெளியேறும் வேதியல் பொருட்கள் காரணமாக, childhood asthma இளம்பிராயத்தில் வரும் ஆஸ்த்துமா ஏற்படக்கூடிய அபாயம் அதிகமாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள Asthma Australia அமைப்பின் CEO, Michele Goldman , ‘climate council இன் அறிக்கை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்து கவனஞ்செலுத்தவேண்டியது அவசியம்’ என்றும் கூறியிருக்கிறார்.

El peligro oculto de los artefactos a gas en hogares y escuelas
El peligro oculto de los artefactos a gas en hogares y escuelas Source: Getty Images/FatCamera

போதுமான காற்றோட்டம் இல்லாத வீட்டினுள் gas அடுப்பைப் பயன்படுத்துவது, வீட்டில் ஒருவர் புகைப்பிடிப்பதானால் புகை பிடிக்காத ஒருவருக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புக்குச் சமமானது என்று climate council அறிக்கை சொல்கிறது. அல்லது பெற்றோர் புகைபிடித்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் தீங்கு போன்றது என்று climate council அறிக்கை சொல்கிறது.

ஆஸ்திரேலியாவில் சுமார் 13 சதவீதமான Childhood asthma நோயாளிகள் சமையல் எரிவாயுவின் பாதிப்பால் நோயுற்றவர்களே என்று 2018 இல் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு முன்வந்த ஆய்வுகளின் முடிவுகளும் gas எரிவதற்கும் childhood asthma வுக்கும் தொடர்பிருப்பதை உறுதி செய்திருக்கின்றன. அதேபோல gas heater உள்ள வீடுகளில் உள்ள குழந்தைகள் கடுமையான respiratory infection என்ற சுவாசத்தொற்றினால் பாதிக்கப்படுவதாக 2018இல் நியூஸீலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

ஆஸ்த்மாவைத்தவிர gas காரணமாக சுவாசப்பையின் செயல்பாடு குறைதல் (reduced lung function) மற்றும் ஒருவகை ஒவ்வாமை (rhinitis) போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

Gas எரிவதால் வெளியேறக்கூடிய மாசுகளைப் பிறந்து மூன்று மாதங்கள் வரை சுவாசிக்கும் சிசுவுக்கு 4 வயதாகும்போது அறிவாற்றல் ஞாபகம் (cognitive memory), பேச்சாற்றல் மற்றும் நிறைவேற்றுத் திறமை (verbal and executive function) என்பன பாதிக்கப்பட்டிருக்கும் சாத்தியம் அதிகம் என்றும் ADHD- Attention Deficit Hyperactivity Disorder கவனச்சிதறலுடன் கூடிய அதிவேக செயல்பாட்டுக் குறைபாடு இவர்களுக்கு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் என்றும் அறிக்கை சொல்கிறது. Gas இலிருந்து வெளியேறும் nitrogen dioxide காரணமாக neurodevelopmental effects நரம்புத்தொகுதியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Newborn, Baby, Labor - Childbirth, Hospital, Childbirth
Newborn, Baby, Labor - Childbirth, Hospital, Childbirth Source: Getty Images

Gas stove ஐப்பொறுத்த அளவில், அது பயன்பாட்டில் இல்லாத போதும் கூட- appliances not in use, methane வாயு கசிவதாக சொல்லப்படுகிறது. The Environmental Science and technology என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையின் படி அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் cooktop பயன்படுத்தப்படாதபோதுகூட methane வாயு stove இல் இருந்து கசிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே ஆய்வை அடுத்த வருடத்திற்குள் இங்கு ஆஸ்திரேலியாவில் நடத்தவிருப்பதாக Stanford பல்கலைக்கழக பேராசிரியர் Robert Jackson கூறியிருக்கிறார். அமெரிக்காவில் cooktop மூலமாக நான்கு கோடி வீடுகளிலிருந்து வருடாந்தம் 28000 டன் green house gas வெளியேறுவதாகவும் இது 5 லட்சம் பெட்ரல் கார்கள் வெளியேற்றும் உமிழ்விற்கு (emissions) நிகரானது என்றும் கூறப்படுகிறது.

அப்படியானால் சமையலுக்கு எந்த முறை சிபாரிசு செய்யப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. நாம் உடனடியாக எமது gas அடுப்புகளை மாற்றுவது சாத்தியமில்லை என்றபோதும் படிப்படியாக induction cooking என்ற முறைக்கு மாறவேண்டும் என்று சிபாரிசு செய்யப்படுகிறது.

Induction cooktop இன் விலைகள் குறைந்துவருவதாகக் கூறப்படுகிறது. Induction cook top இல் Ceramic plate இற்கு அடியில் இருக்கும் சுருளான copper wire மூலமாக electromagnetic field of energy உருவாகிறது. இதற்காக பிரத்தியேகமாக உள்ள ferromagnetic பாத்திரத்தை அடுப்பில் வைத்தால் வெப்பம் பாத்திரத்திற்கு transfer ஆகும். மின் அடுப்பில் போல burner இருக்காது. gas அடுப்பில் போல flame பிழம்பு இருக்காது. பாத்திரத்தை வைத்தால் மட்டுமே சூடு பரவும். எல்லா பாத்திரங்களையும் பயன் படுத்த முடியாது. Cast iron, stainless steel, carbon steel, non stick ceramic with iron base ஆகிய பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்தலாம். இது பாதுகாப்பானது. ஆற்றல் மிக்கது. சுற்றாடலை மாசுபடுத்தாது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது என்றும் சொல்லப்படுகிறது.

Woman preparing food on modern cooktop
Source: Moment RF

எல்லோரும் induction cooking முறைக்கு மாறுவது உடனடிச் சாத்தியமில்லை என்ற நிலையில் வீட்டில் சமைக்கும்போது ஜன்னல்களைத்திறந்து காற்றோட்டத்தை ஏற்படுத்துவது, extraction fan என்ற வீட்டினுள் உள்ள காற்றை வெளியேற்றும் விசிறிகளைப் பயன்படுத்துவது, முடிந்தவரை குழந்தைகளைச் சமையல் கட்டுக்குள் வரவிடாமல் பார்த்துக்கொள்ளுதல் என்பன பரிந்துரைக்கப்படுகின்றன.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now