SKIP TO MAIN CONTENT

சிட்னி முருகன் கோவில் உட்பட பல இடங்களுக்கு கொரோனாவுடன் உலாவிய நபர்! சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை!!

Virus Corona
Corona Virus Source: Pixabay

2 min read

Published

Updated


Skip to article content

சிட்னி முருகன் கோவில், சரவணபவன் உணவகம் உட்பட சிட்னியின் மேற்கு நகரிலுள்ள சில குறிப்பிட்ட இடங்களுக்கு கொரோனா தொற்றுடைய நபர் ஒருவர் நடமாடியுள்ளது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, குறிப்பிட்ட இடங்களுக்கு கீழ்க்காணும் நேரங்களில் சென்றவர்கள் உடனடியாக கொரோனா சோதனை செய்துகொள்ளுமாறும், சோதனை முடிவு தெரியவரும்வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்திணைக்களம் அவசர அறிவிப்பொன்றை இன்று விடுத்துள்ளது.

Merrylands RSL -8/12 Miller St, Merrylands- Monday December 28 - 4pm - 6pm 

Saravanaa Bhavan Indian Restaurant, 1/99 Phillip St, Paramatta - Monday December 28 - 10.20am to 10.50am

Ollie Webb Cricket Ground, 37A Glebe St, Parramatta - Monday December 28 - 7.30am to 11am

Sydney Murugan Temple, 217 Great Western Highway, Mays Hill - Friday January 1 - 12:30pm - 12:46pm, 12.40pm to 1.30pm, 1:06pm - 1:30pm அதேநேரம் 12:46pm - 1:06pm வரை கோவிலுக்குள் இருந்தவர்கள் உடனடியாக சோதனை செய்வதுடன் 14 நாட்களுக்கு தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sydney Marina Dine In & Take Away, 126 Pendle Way, Pendle Hill - Sunday January 3 - 12.30pm - 12.50pm

​Udaya Supermarket, 78 Station Street, Wentworthville - Wednesday 30 December - 6:30pm - 6:35pm,  Sunday 3 January-6:30pm - 6:40pm, Monday 4 January- 6:30pm - 6:35pm

Sri Lakshmi Supermarket ​86-96 Station Street, Wentworthville - Friday 1 January- 5:40pm - 5:45pm

ஜனவரி முதலாம் தேதி சிட்னி முருகன் கோவிலுக்கு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து கோவிலுக்கு வந்த பலர் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி NSW சுகாதார துறையினால் அறிவுறுத்தப்பட்டனர். இவ்வாறு தனிமைப்படுத்தபட்டிருந்த ஒருவரின் அனுபவம் மற்றும் சிட்னி முருகன் கோவில் நிர்வாகத்தின் விளக்கம் அடங்கிய விவரணத்தை செவிமடுக்க:

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now