உலகில் வேகமாக பரவி வரும் Coronavirus என்று அழைக்கப்படும் COVID-19 தொற்று நோய் காரணமாக சவுதிஅரேபிய நாட்டிலுள்ள புனித தலங்களுக்கு வரவேண்டாம் என்று சவுதிஅரேபியா தடை விதித்தது. உடனடியாக இந்த பயணத்தடை நடைமுறைக்கு வருவதாக சவுதிஅரேபியா அறிவித்துள்ளது.
Umrah புனிதப் பயணத்தைத் தொடர்ந்து ஹஜ் எனப்படும் மெக்கா புனித பயணம் ஜூலை மாதம் துவங்கும் நிலையில் சவுதிஅரேபியத் தடை வந்துள்ளது. புனிதப் பயணிகள் யாரும் நாட்டில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சவுதிஅரேபிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் புனிதப் பயண ஏற்பாட்டுக்கு தயாரான பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு சுமார் எண்பது லட்சம் மக்கள் சவுதிஅரேபியாவுக்கு புனிதப் பயணங்களை மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சவுதிஅரேபிய பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதிஅரேபியாவுக்கு இந்த புனிதப் பயணங்களை மேற்கொள்ள இந்தோனேசியா நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு விமான நிலையத்திற்கு சென்ற பின்னர் இந்த தடை அறிவிப்பு வந்ததால் பலரும் ஏமாற்றத்துடன் விமான நிலையங்களிலேயே படுத்துறங்கியதை பார்க்க முடிவதாக செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
