நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் இதேவேகத்தில் பரவிச்செல்லுமானால் மாநிலத்தின் 15 லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அத்தகையதொரு நிலை ஏற்பட்டால் மருத்துவத்துறையினர் தயார்நிலையிலிருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதார தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
Covid -19 தொற்று ஏற்படுவர்களில் பலருக்கு இலேசான அறிகுறிகள் காணப்படலாம் எனவும் இன்னும் சிலர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட நேரிடக்கூடும் என்பதால் தாம் எப்போதும் தயார்நிலையில் இருக்கவேண்டுமென நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதார அதிகாரி Dr Kerry Chant தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறனதொரு பேரழிவு இடம்பெறக்கூடாது, இதனை நோக்கிச்செல்வதை தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதரத்துறையினர் மேற்கொண்டுவருகிறார்கள். அரசாங்கமும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. ஆனால், அவற்றையும் மீறி ஒரு பேரழிவை நோக்கி நாடு நகருமானால், அது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை பாரதூரமாக பாதிக்கும் என்று தொற்றுநோய் மற்றும் கிருமிகள் கட்டுப்பாட்டு வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் இதுவரை 78 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
