ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இன்றுகாலை தூக்கத்திலிருந்து எழுந்தபோது தொண்டை நோவுடன் காய்ச்சலும் காணப்பட்டதையடுத்து தாம் உடனடியாக மருத்துவ உதவியை நாடியிருந்ததாகவும் இதன்போது தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கிய எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது கட்டாயம் என்பதற்கிணங்க தாம் குயின்ஸ்லாந்து மருத்துவமனையில் தற்போது சிகிச்சைபெற்றுவருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கடந்த செவ்வாய்க்கிழமை சிட்னியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு அன்றையதினமே விமானம் மூலம் பிரிஸ்பேர்ன் திரும்பியதாக தெரிவிக்கப்படுறது.

Source: SBS
Share
