ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியுள்ளது. தொடர்ச்சியாக பலருக்கும் இவ்வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவரும்நிலையில், இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க ஆஸ்திரேலிய உதைபந்தாட்ட திருவிழாக்காலம் ஆரம்பமாகவுள்ளநிலையில் மெல்பேர்னை சேர்ந்த உதைபந்தாட்ட வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்பட்டபோதிலும் அவருக்கு இத்தொற்று ஏற்படவில்லை என மருத்துவபரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று குறித்து விளையாட்டு கழக நிர்வாகிகள் கூடிப்பேசவுள்ளதாகவும், பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டால், மைதானத்தினுள் பார்வையாளர்களின்றி மூடிய கதவுகளுக்குள் போட்டிகளை நடத்த திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.
Share
