கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தி ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்களை பொலீஸார் என்று உள்ளே நுழைந்த நபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. அடிலெய்பட் நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றதாக கூறப்படும் இந்தச்சம்பவத்துடன் தொடர்புடைய 31 வயதுடைய சந்தேகநபரை பொலீஸார் கைதுசெய்துள்ளனர்.
குறிப்பிட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் தங்கவைக்கப்பட்டிருந்த அறையின் கதவைத்தட்டி தன்னை பொலீஸ் என்று அடையாளப்படுத்தி முதலில் பணம் பறித்தார் என்றும் துப்பாக்கிமுனையில் மிரட்டி வல்லுறவு கொண்டார் என்றும் திங்களன்று இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநாளிரவு இன்னொரு அறைக்கதவை தட்டி உள்ளே நுழைந்து அங்கிருந்த பெண்ணின் ஆண் நண்பரை குளியலறையில் காத்திருக்கும்படி கூறிவிட்டு, குறிப்பிட்ட பெண்ணை துப்பாக்கி முனையில் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் சந்தேக நபர் மறுத்துள்ளார். அவர் சார்பில் விண்ணப்பிக்கப்பட்ட பிணை அனுமதியை நீதிபதி மறுத்துள்ளார். வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
