ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் மதுபான விற்பனை அதி கூடுதலாக இடம்பெற்றுள்ளது என்று மாநிலங்கள் வாரியாக மதுபானங்களை விநியோகிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலினால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்போர் மற்றும் வீடுகளில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் இப்படியான காலத்தில் மனச்சோர்வு ஏற்படுவது இயற்கை என்பதாலும் மதுபானம் அருந்தும் செயற்பாடு அதிகம் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள சுகாதார நிபுணர்கள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டுமென எச்சரித்துள்ளனர்.
சிட்னி, மெல்பேர்ன், பிறிஸ்பன், கன்பரா மற்றும் கோல்ட் கோஸ்ட் ஆகிய இடங்களில் கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்ற மதுபான விற்பனை, அதற்கு முந்தைய வாரங்களைவிட 32 வீதம் அதிகம் என்றும் அடிலெய்ட், பேர்த், Sunshine கோஸ்ட் ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ள மதுபான விற்பனை அதற்கு முதல் வாரங்களைவிட, 23 சத வீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானம் ஒருபுறமிருக்க புகைத்தல் மற்றும் கஞ்சா பாவனையும் கணிசமானளவு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Share
