கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும்வகையில் அரசாங்கம் COVIDsafe என்ற புதிய செயலியை வெளியிட்டுள்ள நிலையில், இந்த செயலியின் செயற்பாட்டுக்கு ஏற்றவகையிலான புரளிச்செய்தியொன்று குறுந்தகவல் வழியாக பலருக்கு அனுப்பப்பட்டுவருகிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய செயலியை முதல்நாளிலேயே நாடுமுழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரவிறக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பலரது கைத்தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பொய்யான குறுந்தகவலில்- குறிப்பிட்ட தகவலை பெற்றுக்கொண்டுள்ளவர்கள் அவர்களது வீட்டிலிருந்து 20 கிலோ மீற்றருக்கு அதிகமான தூரத்தை தாண்டியிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான காரணத்தை அவர்கள் தெரியப்படுத்தவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இது வெறும் புரளியென்றும் இந்த குறுந்தகவலுக்கும் அரசாங்கத்தின் புதிய செயலிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: FB
இந்தப்புரளி குறித்து - குறுந்தகவல் தொடர்பாக - ஆஸ்திரேலிய பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Share
