கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் எட்டாவது நபர் உயிரிழந்துள்ளார்.
Ruby Princess உல்லாசக் கப்பலில் இருந்தபோது தொற்றுக்குள்ளாகியிருந்த 70வயதுகளிலுள்ள பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்ததாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
கடந்தவாரம் சிட்னி துறைமுகத்தை வந்தடைந்த Ruby Princess கப்பலில் இருந்தவர்களில் 133 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இவர்களில் 107 பேர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய 26 பேர் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
தற்போது உயிரிழந்த பெண்ணுடன் சேர்த்து கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் 7 பேர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 818 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
