கொரோனா தொற்று காரணமாக பலரும் வீடுகளில் தங்கியிருப்பதாலும் கொரோனா குறித்த வேறு அச்சங்களாலும் ஆஸ்திரேலிய இரத்தவங்கியில் இரத்தத்திற்கு பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆஸ்திரேலிய இரத்த வங்கிக்கிளையில் குருதிக்கொடையாளிகளாக ஏற்கனவே தங்களை பதிவு செய்துகொண்டவர்களில் ஆகக்குறைந்தது தினமும் 800 பேர்வரை தங்களது பெயர்களை ரத்து செய்துவருகிறார்கள் என்றும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 10 வீத அதிகரிப்பு எனவும் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த கொடையாளர்கள் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அடுத்த இரண்டு வாரத்தில் ஏழாயிரத்து 100 குருதிக்கொடையாளர்கள் தேவைப்படுவதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது ஆஸ்திரேலியாவில் சுமார் ஐந்து லட்சம் பேர் குருதிக்கொடையாளர்களாக தங்களை பதிவு செய்து தொடர்ச்சியாக ரத்தம் வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடக்கது.
மேலதிக விபரங்களுக்கு ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்தை .தொடர்புகொள்ளுங்கள்
Share
