கொரோனா பேரிடர் காலப்பகுதியில் JobSeeker உதவிப்பணம் பெறுவதற்கு விண்ணப்பித்த இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டோரின் விண்ணப்பங்கள் இதுவரை பரிசீலித்து முடிவடைந்துவிட்டதாக Centrelink அறிவித்துள்ளது.
அதேநேரம் விண்ணப்பதாரர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதில் தங்களது தரப்பில் சில சிக்கல்கள் உள்ளதை தாம் அறிந்திருப்பதாகவும் அதுகுறித்து கவனம் செலுத்திவருவதாகவும் Centrelink தெரிவித்துள்ளது.
பேரிடர்கால உதவிப்பணத்துக்கு விண்ணப்பித்த பலருக்கு Centrelink-இலிருந்து அழைப்பு வந்து அவை சில நிமிடநேர உரையாடலோடு தானாகவே துண்டிக்கப்பட்டுவிடுவதாக பலர் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
Centrelink இதுபற்றி தெரிவித்தபோது, இந்த தொலைபேசி சிக்கல் பலருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தாங்கள் இதுகுறித்து தமது தொலைபேசி சேவை நிறுவனத்தோடு பேசி சரி செய்வதற்கு முயற்சிசெய்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் அல்லது அழைப்பினைத் தவறவிட்டவர்கள் 132 850 என்ற JobSeeker உதவி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய இடர்கால கொடுப்பனவு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு ஏதுவாக ஆறாயிரத்து 200 பேர் மேலதிகமாக பணியாற்றிவருவதாகவும் Centrelink தெரிவித்துள்ளது.
Share
